Lok Sabha Speaker Election: சுதந்திர இந்தியாவில் 2 முறை மட்டுமே நடந்த மக்களவை சபாநாயகர் தேர்தல் - வரலாறு சொல்வது என்ன?

Lok Sabha Speaker Election: சுதந்திர இந்தியாவில் இதுவரை இரண்டு முறை மட்டுமே, மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றுள்ளது.

Continues below advertisement

Lok Sabha Speaker Election: 1976ம் ஆண்டிற்குப் பிறகு முதல்முறையாக, இந்தியாவில் மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

Continues below advertisement

மக்களவை சபாநாயகர் தேர்தல்:

மக்களவை சபாநாயகர் பதவிக்கான அரிய தேர்தலை நாடாளுமன்றம் நடத்தவுள்ளது. ஒருமனதாக சபாநாயகரை தேர்வு செய்வது தொடர்பாக அரசு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. 17வது லோக்சபாவில் சபாநாயகராக இருந்த ஓம் பிர்லாவை நரேந்திர மோடி மீண்டும் வேட்பாளராக களமிறக்கியுள்ளது.

8வது முறையாக எம்.பி., ஆக தேர்வு செய்யப்பட்டுள்ள சுரேஷை வேட்பாளராக நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்நிலையில், சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்தப்பட்ட இரண்டு நிகழ்வுகளைப் பற்றி இந்த தொகுப்பில் அறியலாம்.

1952: ஜி.வி. மால்வங்கர் vs ஷங்கர் சாந்தாராம் மோரே:

நாட்டின் முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு கூடிய நாடாளுமன்றத்தில் நாட்டில், பிரதமர் ஜவஹர்லால் நேரு, குஜராத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய சுதந்திரப் போராட்ட வீரரும், அரசியல் நிர்ணய சபையின் முன்னாள் உறுப்பினருமான மால்வங்கரை சபாநாயகராக தேர்வு செய்வதற்கான தீர்மானத்தை முன்வைத்தார். அதை அப்போதைய நாடாளுமன்ற விவகார அமைச்சர் சத்ய நாராயண் சின்ஹா, மத்திய தர்பங்கா எம்பி எஸ்என் தாஸ் மற்றும் குர்கான் எம்பி பண்டிட் தாக்கூர் தாஸ் பார்கவா ஆகியோர் ஆதரித்தனர் .

இருப்பினும், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நிறுவனரும், சபையில் இருந்த 16 சிபிஐ எம்.பி.க்களில் ஒருவருமான கண்ணனூர் எம்.பி ஏ.கே.கோபாலன், மோரேவை வேட்பாளராக களமிறக்கினார். அவருக்கு பெர்ஹாம்பூர் எம்பி டிகே சௌத்ரி (புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் நிறுவனர் தலைவர்), மாவேலிக்கரா எம்பி என்எஸ் நாயர் (தொழிற்சங்கவாதி) மற்றும் பாசிர்ஹாட் எம்பி ரேணு சக்ரவர்த்தி (சிபிஐ) ஆகியோர் வழிமொழிந்தனர். இதையடுத்து நடந்த தேர்தலின் முடிவில், மல்வங்கர் 394 வாக்குகளைப் பெற்று சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  55 எம்பிக்கள் அவருக்கு எதிராக வாக்களித்தனர்.

இதையும் படியுங்கள்: India Vs Australia Cricket: பேசியே வெறுப்பேற்றிய ஆஸ்திரேலியா..! அரையிறுதிக்கே ஆப்பு, வெச்சு செய்யும் இந்திய ரசிகர்கள்

1976: பிஆர் பகத் vs ஜகன்னாதராவ் ஜோஷி:

ஜூன் 1975 இல் அவசரநிலை பிரகடனத்தைத் தொடர்ந்து, அப்போதைய சபாநாயகரான ஜி.எஸ். தில்லோன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.  இதையடுத்து, நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத் தொடரின் போது சபாநாயகர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது, காங்கிரஸ் எம்.பி.யான பகத்தை சபாநாயகர் வேட்பாளராக களமிறக்குவதாக பிரதமர் இந்திரா காந்தி முன்மொழிந்தார்.

இருப்பினும், பாவ்நகர் எம்பி பிஎம் மேத்தா ( நிறுவன காங்கிரஸ்  உறுப்பினர்), ஜோஷியை சபாநாயகராக களமிறக்குவதாக ஒரு தீர்மானத்தை முன்வைத்தார். ஜனசங்கத்தின் உறுப்பினரான ஜோஷியை ஹாஜிபூர் எம்பி டிஎன் சிங் (காங்கிரஸ் ஓ) ஆதரித்தார். இதையடுத்து நடைபெற்ற தேர்தலின் முடிவில் பகத்துக்கு ஆதரவாக 344 வாக்குகளும், எதிராக 58 வாக்குகளும் கிடைத்தது. இதையடுத்து, பகத் சபாநாயகராக தேர்வானார்.

Continues below advertisement