ஆந்திரா மாநிலம் காக்கிநாடா மாவட்டம் அன்னவரை பகுதியைச் சேர்ந்த சசிகலா (20). இவர் துவ்வாடாவில் உள்ள கல்லூரியில் எம்சிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் குண்டூர்-ராயகடா விரைவு ரயிலில் தான் தினமும் கல்லூரிக்கு செல்வது வழக்கம்.
அதன்படி நேற்று சகிகலா வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதற்காக குண்டூர் - ராயகடா விரைவு ரயிலில் ஏறி துவ்வாடாவிற்கு வந்தார். துவ்வாடா ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தபோது ரயில் நிற்பதற்குள் இறங்க முயன்றார். அப்போது கால் தவறி ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் கல்லூரி மாணவியான சசிகலா சிக்கிக் கொண்டார். அந்த மாணவியின் கால் தண்டவாளத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்து வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்தார்.
இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் ரயில்வே அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். பின்பு சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினரும், பயணிகளும் மாணவியை வெளியே எடுக்க முயற்சி செய்தனர். கடும் முயற்சி செய்து அந்த மாணவியை வெளியே எடுக்க முடியாத நிலையில் நடைமேடையின் ஒரு பகுதியை உடைத்து சுமார் ஒன்றரை மணி நேரமாக போராடினார். பின்பு ஒன்றரை மணி நேரத்துக்கு பின்பு கல்லூரி மாணவி சசிகலாவை மீட்டனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவரை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் குண்டூர்-ராயகடா விரைவு ரயில் ஒன்றரை மணி நேரம் தாமதாக புறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைராகி வருகிறது.
முன்னதாக, கலபுரகி ரயில் நிலையத்தின் நடைமேடைக்கும் தண்டவாளத்துக்கும் இடையில் பெண் உட்பட இரண்டு பயனியர் சிக்கிக் கொண்டனர். கடந்த வாரம் இரவு ஹுசைன் சாகர் ரயில், 3வது நடைமேடைக்கு வருவதாக அறிவிப்பு வெளியானது. தாமதமாக வந்ததால் பெண் உட்பட இரண்டு பயனியர் முதல் நடைமேடையில் இருந்து இறங்கி மூன்றாவது மேடைக்கு வர முயன்றனர்.
அப்போது சரக்கு ரயில் ஒன்று வேகமாக வந்தது. உடனடியாக சுதாரித்து கெண்ட இருவரும் நடைமேடைக்கு தண்டவாளத்துக்கும்இடையில் உள்ள இடைவெளியில் படுத்துக் கொண்டனர். ரயில் கடந்த பின் மற்ற பயணியர் அவர்களை பத்திரமாக மீட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது.
மேலும் படிக்க