உத்தரப் பிரதேசத்தில் குடியிருப்போர் நல சங்கத்தின் பாதுகாவலரை இரண்டு பெண்கள் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில் தொடர்புடைய பெண்கள் முன்னதாகக் கைது செய்யப்பட்டனர்.


உத்தரப் பிரதேசம், நொய்டாவின் செக்டர் 121இல் உள்ள அஜ்னாரா ஹோம்ஸ் குடியிருப்பில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.


முன்னதாக சமூக வலைதளங்களில் இச்சம்பவம் குறித்த வீடியோ வைரலானது. இந்த வீடியோவில் பாதுகாவலரை இரண்டு பெண்கள் மிரட்டும் காட்சி பதிவாகியுள்ளது. முதலில் ஒரு பெண் வீடியோவில் பேசிக் கொண்டிருக்கும் நிலையில், திடீரென்று அவர் காவலரின் காலரைப் பிடித்து இழுத்தும், அவர் அணிந்திருந்த தொப்பியைத் தள்ளி விட்டும் மோசமாக நடந்து கொள்கிறார்.


 






சுற்றி காவலர்கள், பாதுகாவலர்கள் என சிலர் சூழ்ந்திருக்கும் நிலையில், இப்பெண்கள் குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டதாகவும் பாதுகாவலரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.


இச்சம்பவத்துக்கு முன்னதாக சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.


 






இந்நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய பெண்கள் முன்னதாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் இந்தப் பெண்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நொய்டா கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் (ஏடிசிபி) எஸ்எம் கான் தெரிவித்தார்.


முன்னதாக பாதிக்கப்பட்ட நபருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு காவல் துறையினர் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


 






இதேபோல் முன்னதாக இளம்பெண் ஒருவர் போதையில் காவலரின் சட்டையை பிடித்தும் உதைத்தும் தாக்கி அவமானப்படுத்தும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி கண்டனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.