Watch Video: திருமண வீட்டில் நடனமாடிக் கொண்டிருந்த இளம்பெண், திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.


சரிந்து விழுந்த பெண்:


மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் திருமண விழாவின் போது நடனமாடிக்கொண்டிருந்த 23 வயது பெண் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சிய ஏற்படுத்தியுள்ளது. அவர் இந்தூரைச் சேர்ந்த பரிணிதா ஜெயின் என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் தனது உறவினரின் சகோதரியின் திருமண விழாவில் கலந்து கொள்ள விதிஷாவிற்கு வந்திருந்த போது இந்த சோகம் அரங்கேறியுள்ளது. 200க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்ட 'ஹல்தி' விழாவின் போது, பரினிதா மேடையில் நடனமாடிக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.



வைரல் வீடியோ:


இதுதொடர்பாக வைரலாகும் வீடியோவில், ”சனிக்கிழமை இரவு 'லெஹ்ரா கே பால்கா கே' என்ற பாலிவுட் பாடலுக்கு பரினிதா நடனமாடிக்கொண்டிருந்தார். உற்சாகமான நடன அசைவுகளின் மூலம், அங்கு கூடியிருந்தவர்களின் கரகோஷங்களை பெற்றார். திடீரென உடலின் மொத்த கட்டுப்பாட்டையும் இழந்து, நிலைகுலைந்து மேடையிலேயே அந்த பெண் சரிந்து விழுந்தது” தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அப்போது விழாவில் கலந்து கொண்ட மருத்துவர்களான குடும்ப உறுப்பினர்கள், அவருக்கு CPR (இதய நுரையீரல் மறுமலர்ச்சி) கொடுக்க முயன்றனர், இருப்பினும், அவர் பதிலளிக்கவில்லை. உடனடியாக அவர் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.






யார் இந்த பரினிதா?


எம்பிஏ பட்டதாரியான பரினிதா, இந்தூரின் தெற்கு துகோகஞ்சில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, அவரது தம்பிகளில் ஒருவரும் 12 வயதில் மாரடைப்பால் இறந்துள்ளார். இருப்பினும், மத்தியப் பிரதேசத்தில் இசைக்கு நடனமாடிய இளம் பெண் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு அக்டோபரில், அகர்-மால்வா மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 15 வயது சிறுவன் மாரடைப்பால் இறந்தான். இதேபோல், மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் யோகா நிகழ்ச்சியின் போது மேடையில் நடனமாடிக்கொண்டிருந்த 73 வயது முதியவர் ஒருவர் மாரடைப்பால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.