தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடும் நிலைமை இப்போதைக்கு இல்லை என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.


தமிழ்நாட்டிற்கு தண்ணீரே இல்லை:


 கிருஷ்ணராஜ சாகர் (KRS) அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது என்று வெளியான செய்தியால் சர்ச்சை எழுந்தது. இதற்கு பதிலளித்துள்ள துணை முதலமைச்சரும் நீர்வள துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார்,” கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து பெங்களூருக்கு மட்டுமே தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது; அருகாமையில் உள்ள மாநிலத்திற்கு அல்ல. 


இந்த விவகாரம் தொடர்பாக செய்தியளார் சந்திப்பில்  துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேசுகையில், “தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறந்துவிடுவது குறித்து பேச்சிற்கே இடமில்லை. அதுவும் தற்போதைய சூழலில் தண்ணீர் திறந்து விட முடியாது, தமிழ்நாட்டிற்கு எவ்வளவு தண்ணீர் திறக்கப்படுகிறது என்பதற்காக கணக்கு விவரம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.  இன்று தண்ணீர் திறக்கப்பட்டால் கூட தமிழ்நாட்டை வந்து அடைய நான் நாள்கள் ஆகும். கர்நாடக மாநிலத்தில் நிலவும் வறட்சியான சூழலில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடும் அளவுக்கு நாங்கள் முட்டாள் இல்லை.” என்று தெரிவித்துள்ளார். 


தண்ணீர் தட்டுப்பாடு:


 'Raitha Hitarakshana Samiti' கட்சி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட பட்டுள்ளதாக எதிர்த்து போராட்டம் நடத்தியது.  கர்நாடக மாநிலத்தில் நிலவும் வறட்சி குறித்து பேசுகையில், “கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு கடந்த சில நாட்களாக நிலவி வருகிறது.  தண்ணீர் பிரச்னை காரணமாக பல்வேறு தனியார் பள்ளிகள், பயிற்சி மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு, ஆன்லைன் வகுப்பு நடத்த முடிவு செய்துள்ளன. பெரும்பாலான ஆழ்துளை கிணறுகள் வறண்டு விட்டன. பெங்களூருவில் உள்ள 13,900 ஆழ்துளை கிணறுகளில் 6,900 ஆழ்துளை கிணறுகள் செயலிழந்து விட்டன. இதை சரிசெய்ய தண்ணீர் விநியோகம் செய்ய டேங்கர்களை ஏற்பாடு செய்துள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.