கேரளாவின் உயிரியல் வளங்களில் மிக முக்கியமான பங்கு வகிக்கும் காட்டு யானைகள் கடந்த 7 ஆண்டுகளில் 827 மரணங்களை சந்தித்துள்ளன என்பது புதிய புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா காடுகளில் காட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. பெரும்பாலான யானைகள் இயற்கையாக மரணம் அடைந்தாலும் சில யானைகள் மனித தாக்குதல் மற்றும் தொந்தரவுக்கு ஆளாகி உயரிழக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. கடந்த 7 ஆண்டுகளில் 827 காட்டு யானைகள் இறந்துள்ளன என கேரள வனத்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. அவற்றில் 84 யானைகள் உயிரிழப்புகளுக்கு மனித தாக்குதல் காரணமாக இருந்துள்ளது என வனத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலான யானைகள் இயற்கையான காரணங்களால் இறந்தாலும், காட்டில் வசிக்கும் மனித தாக்குதலுக்கு ஆளாகும் சூழல் நிலவுகிறது. சில யானைகள் மின்சார வேலியில் சிக்கி உயிரிழக்கின்றன.
வெடிபொருட்கள் அல்லது பூச்சிக்கொல்லிகள் பூசப்பட்ட அன்னாசி போன்ற பழங்களை சாப்பிட்டு யானைகள் உயிரிழக்கும் நிகழ்வுகளும் நடக்கின்றன. மனித வாழ்விடங்களுக்கு வழி மாறியோ அல்லது உணவு தேடி வரும்போது காட்டு யானைகள் உள்ளூர் கிராமவாசிகளால் துன்புறுத்தப்படுகின்றன. 2019ம் ஆண்டில் மனித தாக்குதல் மற்றும் தொந்தரவுக்கு ஆளாகி 12 யானைகள் இறந்தன. இந்த எண்ணிக்கை கடந்த 2024ம் ஆண்டில் 18 ஆக அதிகரித்தது. இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளா காடுகளில் காட்டு யானைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயிரிழக்கும் சம்பவங்கள் வன ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வனத்துறை தரவுகளின்படி, இந்த மரணங்கள் பலவிதமான காரணங்களால் ஏற்பட்டுள்ளன என கூறப்படுகிறது. மனித-விலங்கு மோதல்கள், மின்சாரம் தாக்குதல், சிறைபிடித்தல் மற்றும் தவறான பராமரிப்பு, சாலை மற்றும் ரயில் மோதல்கள், பிற இயற்கை மற்றும் செயற்கை காரணங்கள், மாறி வரும் நிலம் பயன்பாடு, வேளாண் நிலங்களில் தானாக நுழைதல், மற்றும் வனப்பகுதிகளில் குறைந்து வரும் உணவுப் பொருட்கள் ஆகியவையும் யானைகளின் இயல்பான வாழ்விடத்தை குறைத்து வருகின்றன. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள், யானைகளின் குறையும் எண்ணிக்கை எக்காளத்தில் பல பிராந்திய உயிரியல் மையங்களை பாதிக்கக்கூடும் என எச்சரிக்கின்றனர். யானைகள் ஒரு பருவமழை முன்கூட்டிப் புகாரி போலவே. அவற்றின் மரணங்கள், வனங்களின் அழிவை முன்பே காட்டுகின்றன என்கின்றனர் வன விலங்கு ஆராய்ச்சியாளர்கள்.
இதனை தடுக்க கடுமையான சட்ட அமலாக்கம், மனித-யானை மோதல்களை குறைக்கும் நீண்டகால திட்டங்கள், பசுமை வழித்தடங்கள் (Wildlife Corridors) உருவாக்கம், இயற்கை வாழிடங்கள் பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு காட்டு யானைகள் உயிரிழப்பின் பின்னணி என்பது ஒரு பரந்த சுற்றுச்சூழல் சிக்கலின் வெளிப்பாடு. இது மீதமுள்ள உயிர்வாழ் உயிரினங்களுக்கான நலனையும், மனிதர்களின் நீண்டகால சூழலியல் பாதுகாப்பையும் கேள்விக்குள்ளாக்குகிறது. அரசும், மக்கள் சமூகங்களும் இணைந்து செயல்படாத வரை, இந்த எண்ணிக்கைகள் மேலும் தீவிரமாகும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.