Wife Killed Husband: புனேவைச் சேர்ந்த பெண் பிறந்தநாளை கொண்டாட துபாய்க்கு அழைத்துச் செல்லாத கணவனை அடித்துக் கொலை செய்துள்ளார்.


கணவனை கொன்ற மனைவி:


புனேவில் உள்ள வான்வாடி பகுதியை சேர்ந்த 36 வயதான கட்டுமான தொழிலதிபரான நிகில் புஷ்பராஜ் கண்ணா, 6 ஆண்டுகளுக்கு முன்பாக ரேணுகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இந்நிலையில், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் நிகில் கொல்லப்பட்ட சம்பவம் தான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் ரேணுகாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மோதலும் - காரணமும்:


நிகில் புஷ்பராஜா - ரேணுகா தம்பதி இடையே வெள்ளிக்கிழமை மதியம் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் அது உடல் ரீதியான மோதலாகவும் மாறியுள்ளது.  தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக துபாய்க்கு அழைத்துச் செல்லாதது, பிறந்தநாள் மற்றும் திருமண நாள் கொண்டாட்டத்திற்காக விலையுயர்ந்த பரிசுகளை வழங்காதது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. முன்னதாக தனது உறவினர்கள் சிலரின் பிறந்தநாளைக் கொண்டாட டெல்லி செல்ல, அனுமதிக்காததாலும் கணவர் மீது ரேணுகா கோவத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.


இதையும் படிங்க: மழைக் காலத்தில் காரை பாதுகாக்க செய்ய வேண்டியவை என்ன? - விபத்தை தவிர்க்க எளிய டிப்ஸ் இதோ..!


கணவனை தாக்கிய மனைவி:


இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியபோது, கடும் ஆத்திரத்தில் இருந்த ரேணுகா கணவர் நிகிலை முகத்திலேயே குத்தியுள்ளார். இதனால், பற்கள் மற்றும் மூக்கு உடைந்ததில் சுயநினைவை இழந்த கணவன், ரத்தம் சொட்ட சொட்ட மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட குடும்பத்தினர் நிகிலை அருகிலிருந்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், நிகில் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.


இதையும் படிங்க: உங்கள் காரின் மைலேஜை அதிகரிக்க செய்ய வேண்டியது என்ன? - எளிய டிப்ஸ்.. பார்ட் -1


மனைவி கைது:


நிகிலின் மரணம் தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த காவல்துறைக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், ரேணுகாவை கைது செய்து அவர் மீது ஐபிசி 302 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்தப் பெண் தனது கணவனை கைகளால் மட்டும் தான் அல்லது ஏதாவது பொருளைப் பயன்படுத்தினாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே மரணத்திற்கான சரியான காரணம் தெரியவரும் என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசுப் பொருட்கள் வாங்கித் தராததால் கணவனையே, மனைவி அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.