கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் பலர் உயிரிழந்துள்ளனர். தற்போது ஒரளவு இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் குறைந்து வரும் சூழல் உருவாகியுள்ளது. எனினும் ஒரு சில இடங்களில் கொரோனா பாதித்த நோயாளிகள் மற்ற பிரச்னைகள் காரணமாக உயிரிழக்க நேரிடுகிறது. அந்தவகையில் ஒருவர் கொரோனா பாதித்து உயிரிழக்கும் சூழல் உருவாகியுள்ள நிலையில் அவருடைய உயிரணுவை சேகரித்து வைக்க வேண்டும் என்று அவருடைய மனைவி கோரிக்கை விடுத்துள்ளார். யார் அவர்? என்ன நடந்தது?
குஜராத் மாநிலம் பரோடா பகுதியைச் சேர்ந்த 29 வயது மதிக்க நபர் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பிறகு உடலில் உள்ள பிற பாகங்களில் சற்று பாதிப்பு அதிகமாகியுள்ளது. இதனால் அவை வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக செயல் இழக்க தொடங்கியுள்ளன. இதன் காரணமாக அவர் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். எனினும் கடந்த வாரம் அவருடைய நிலைமை மிகவும் மோசம் அடைந்துள்ளது. இதை தொடர்ந்து இன்னும் ஒரிரு நாட்களில் அவர் உயிரிழந்துவிடுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அவருடைய மனைவி தன் கணவரின் உயிரணுவை சேகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதை வைத்து அவர் செயற்கை முறையில் கருத்தரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் தற்போது இருக்கும் இனப்பெருக்கம் உதவி தொழில்நுட்ப சட்டத்தின்படி ஒரு ஆணின் உயிரணுவை அவரின் அனுமதி இல்லாமல் எடுத்து சேகரிக்க முடியாது. அந்தப் பெண்ணி கணவர் தற்போது சுயநினைவில் இல்லை. ஆகவே இதை செய்ய மருத்துவர்கள் மறுத்துள்ளனர். தன்னுடைய கணவர் மறைந்துவிட்டாலும் அவருடைய உயிரணு மூலம் குழந்தை பெற்று அதை வளர்க்க அந்தப் பெண் தீர்மானித்துள்ளார். இதற்கு கணவரின் தாய் மற்றும் தந்தை உறுதுணையாக இருந்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தனர். இதை அவசர வழக்காகவும் விசாரிக்க கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று உடனடியாக வழக்கை விசாரித்த நீதிபதி அந்தப் பெண்ணின் கணவரின் உயிரணுக்களை சேகரித்து வைக்க மருத்துவமனைக்கு உத்தரவிட்டது. எனினும் அதை வைத்து அப்பெண்ணிற்கு செயற்கை கருத்தரிப்பு செய்ய தற்போது அனுமதி வழங்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக நாளை மீண்டும் வழக்கை விசாரிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
அந்தப் பெண்ணின் ஆசைக்கு ஏற்ப அவருடைய கணவரின் உயிரணுக்களை மருத்துவமனை நிர்வாகம் எடுத்து சேகரித்து வைத்துள்ளது. தன்னுடயை கணவர் இறந்து போகும் தருவாயில் பெண் ஒருவர் இப்படி செய்து இருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் முடிவில் அவருக்கு செயற்கை கருத்தரிப்பு செய்ய அனுமதி வழங்கப்படுமா என்பது தெரிய வரும்.
மேலும் படிக்க: Census 2021 : 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஓபிசி தகவல்கள் சேகரிக்கப்படாது - மத்திய அரச