Just In





வியக்கவைக்கும் படங்கள்! விண்வெளியில் இருந்து படம் பிடிக்கப்பட்ட இந்தியா
India From Space: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து, பூமியை இரவில் படம் பிடித்த காட்சிகளானது வியக்க வைத்துள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து, இரவில் மின் ஒளியில் மிளிரும் பூமியின் காட்சியை நாசா விண்வெளி நிலையம் வெளியிட்டுள்ளது.
விண்வெளியிலிருந்து இந்தியா:
சர்வதேச விண்வெளி நிலையத்தின் சமூக ஊடக பக்கத்தில், விண்வெளியில் இருந்து பூமியை படம் பிடிக்கப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில், மத்திய மேற்கு அமெரிக்கா படம் , இந்தியாவின் படம், தென்கிழக்கு ஆசியா படம் மற்றும் கனடா ஆகிய நாடுகள் இரவில் மின் ஒளியில் மிளிருவதை பார்க்க முடிகிறது.
இப்புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்ட ISS, "மேலே உள்ள நட்சத்திரங்களையும், கீழே பூமியின் ஒளியையும், பூமியின் அடிவானத்தை மூடும் வளிமண்டல ஒளியையும் நீங்கள் காணும்போது" என்று பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்த பதிவின் படத்தில் முதல் படமானது மத்திய மேற்கு அமெரிக்கா படம், இரண்டாது படமானது இந்தியா படம், மூன்றாவது படம் தென்கிழக்கு ஆசியா படம், நான்காவது படம் கனடா எனவும் குறிப்பிடப்பட்டுளது.
சர்வதேச விண்வெளி நிலையம்
சர்வதேச விண்வெளி நிலையமானது, பூமியில் இருந்து சுமார் 400 கி.மீ உயரத்தில் பூமியைச் சுற்றி வருகிறது. சர்வதேச விண்வெளி நிலையமானது, பூமியில் இருந்து சுமார் 400 கி.மீ உயரத்தில் பூமியைச் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கிறது. இது, சுமார் 90 நிமிடத்தில் பூமியை முழுவதுமாக சுற்றி வந்து விடும் என தகவல் தெரிவிக்கின்றன. அதாவது, ஒரு நாளில் சராசரியாக 16 முறை பூமியைச் சுற்றி வரும் என கூறப்படுகிறது. சில நேரங்களில், வானில் சிறு புள்ளி வெளிச்சம் போல் வானத்தில் செல்வதை பார்க்கலாம்.
இந்த விண்வெளி நிலையத்தில், விண்வெளி வீரர்கள் தங்கி, விண்வெளி தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன்புகூட, அமெரிக்காவின் விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்று, கடந்த மார்ச் மாதம் பூமி திரும்பியது அனைவரும் அறிந்ததே. இந்நிலயில், இங்கு இருந்து பூமியை நோக்கி எடுத்த காட்சிகள் வியக்க வைக்கும் வகையில் இருக்கிறது.
Also Read: Tamil New Year 2025: சித்திரையா, தையா: தமிழ் புத்தாண்டு எது? அறிவியல் சொல்வது என்ன?