கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் SIT குழு அமைக்கப்பட்டுள்ளது. யார் இவர்? என்பதை பார்ப்போம்

Continues below advertisement

யார் இந்த அஜய் ரஸ்தோகி?

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஆதராவாகவும், கருணைக் கொலை உரிமைக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியவர்  தான் நீதியரசர் அஜய் ரஸ்தோகி. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியான இவர் ஜூன் 18, 1958 ஆம் ஆண்டு பிறந்தவர். இவரது தந்தை ஹரிஷ் சந்திர ரஸ்தோகி ராஜஸ்தான் நீதிமன்றத்தின் சிவில் வழக்கறிஞராக இருந்தவர். இதனால் இவருக்கும் சிறுவயதில் இருந்தே வழக்கறிஞர் ஆக வேண்டும் என்ற ஆசை துளிர்விட ஆரம்பித்தது. அந்தா வகையில் கடந்த 1982 ஆம் ஆண்டு அரசியலமைப்பு மற்றும் சேவை சட்டத்தில் நிபுணத்துவம் பெற்று நீத்துறையில் தனது வாழ்க்கையை தொடங்கியவர். 

1990 ஆம் ஆண்டு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் ஆலோசகராகப் பணியாற்றிய அவர், 2004 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 2013 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ராஜஸ்தான் மாநில சட்ட சேவைகள் ஆணையத்தின்  நிர்வாகத் தலைவராகப் பணியாற்றினார். அந்தக் காலகட்டத்தில் அந்த ஆணையம் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தேசிய சிறப்பு விருதை வென்றது.

Continues below advertisement

158 தீர்ப்புகள்:

இதனைத் தொடர்ந்து அஜய் ரஸ்தோகி 2018 ஆம் ஆண்டு திரிபுரா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியானார். பின்னர் நவம்பர் 2, 2018 அன்று இந்திய உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்றத்தில் தனது பதவிக்காலத்தில் 158 தீர்ப்புகளை வழங்கியுள்ளார். 

விலங்கு நலன் மற்றும் பாலின உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்தி செய்து ஜல்லிக்கட்டு மற்றும் முத்தலாக் தொடர்பான  தீர்ப்புகளை வழங்கியவர். ஓய்வு பெற்ற பிறகும் கூட, நீதிபதி ரஸ்தோகி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறார். அந்த வகையில் கரூர் கூட்ட நெரிசல் சிபிஐ விசாரணை கண்காணிப்புக் குழுவின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டது, நீதித்துறை அவரது நேர்மை மற்றும் நிபுணத்துவத்தின் மீதான நம்பிக்கையை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது.