கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளின் நிலை என்ன என்பது குறித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்லது. பிப்ரவரி 2 ஆம் தேதிக்குள் ஆளுநர் தரப்பு பதில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


 தமிழ்நாடு ஆளுநருக்கும் அரசுக்கு நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு அரசு அனுப்பும் கோப்புகளுக்கு ஆளுநர் பதிலளிக்காமல் நிலுவையில் வைத்திருப்பது, அல்லது அதனை திருப்பி அனுப்புவது இல்லையெனில் அதனை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பது போன்ற நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் சிக்கந்தர் மற்றும் குண்டாஸ் சட்டத்தில் கீழ் சிறையில் இருக்கும் ரியாஸுதீன் உள்ளிட்ட 3 கைதிகளையும் முன்கூட்டியே விடுவிக்க தமிழ்நாடு அரசு முக்கிய முடிவை எடுத்திருந்தது. அந்த கோப்புகள் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலை 2021 ஆம் ஆண்டு சட்டபேரவை அது நிறைவேற்றப்பட்டது. ஆனால் அது தொடர்பாக ஆளுநர் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. மேலும் இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  


இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரப்பட்டது. அப்போது ஏன் இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டவில்லை, இந்த மனுக்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் பிப்ரவரி 2 ஆம் தேதி ஆளுநர் தரப்பில் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.  உச்சநீதிமன்றம் இந்த வாரம் மட்டுமே இயங்கும், அதனை தொடர்ந்து 3 வாரங்கள் பண்டிகை காலம் கருதி குளிர்கால விடுமுறை அளிக்கப்படும். மீண்டும் ஜனவரி மாதத்தில் தான் உச்சநீதிமன்றம் செயல்படத் தொடங்கும். ஜனவரி மாதம் ஏற்கனவே வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிப்ரவரி 2 ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதிமட்டுமின்றி ஆளுநர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் பஞ்சாப் அரசின் மனுக்களும் பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.