ரயிலில் ஹலால் சான்றளிக்கப்பட்ட தேநீர் வழங்கியதால், கோபமடைந்த பயணி ஒருவருக்கும், இந்திய ரயில்வே அதிகாரிக்கும், இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
ஹலால் சான்றளிக்கப்பட்ட தேநீர் என்றால் என்ன என்று அந்த வீடியோவில் பயணி ஒருவர் ரயில்வே ஊழியர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு ரயில்வே அதிகாரி, தேநீர் சைவ உணவு என்று விளக்கினார்.
அந்த பயணி, எங்களுக்கு ஹலால் சான்றளிக்கப்பட்ட தேநீர் தருகிறீர்களா?" என்று ரயில்வே அதிகாரியிடம் கேட்டார். டீ சாஷேவை ஆராய்ந்த அதிகாரியிடம் பயணி, ’’எங்களுக்கு ஐஎஸ்ஐ சான்றிதழ் தெரியும், ஹலால் சான்றிதழ் என்றால் என்ன என்பதை விளக்குங்கள்" என்று கூறினார்.
அதற்கு அதிகாரி, விளக்குகிறேன், "இது மசாலா டீ ப்ரீ- மிக்ஸ். இது 100% சைவ உணவு" என்று தெரிவித்தார். "ஆனால் என்ன ஹலால் சான்றிதழ்? இதற்குப் பிறகு நான் பூஜை செய்ய வேண்டும்." என பயணி கூறினார். "வீடியோ எடுக்கிறீர்களா? இது 100% சைவம்’’ என்று ரயில்வே ஊழியர்கள் கூறினர்.
"எனக்கு எந்த மதச் சான்றிதழும் வேண்டாம். தயவுசெய்து இந்த உணர்வுகளை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஸ்வஸ்திக் சான்றிதழைப் பதிவு செய்யுங்கள்" என்று பயணி கூறினார். "சரி, அதை நினைவில் வைத்துக் கொள்கிறேன்" என்று ஊழியர்கள் பயணிக்கு பதில் அளித்தனர்.
டீ பிரீமிக்ஸுக்கு ஹலால் சான்றிதழ் ஏன் தேவை என்று பல பயனர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் இந்த வீடியோ வைரலாகியுள்ளது. ரயில்வே அதிகாரியின் பொறுமையை சில பயனர்கள் பாராட்டினர் மற்றும் தேநீர் இயல்பாகவே சைவ உணவு என்று பயணிகளுக்கு விளக்கினர்.
ஹலால் சான்றிதழ் என்றால் என்ன?
ஹலால் சான்றிதழ் முதன்முதலில் 1974-இல் இறைச்சிக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. மற்றும் 1993 வரை இது இறைச்சி பொருட்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. பின்னர் அது மற்ற உணவுப் பொருட்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள், மருந்துகள் போன்றவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
அரபு மொழியில், ஹலால் என்றால் அனுமதிக்கப்பட்டது மற்றும் ஹலால் சான்றிதழ் என்பது இஸ்லாமிய சட்டத்திற்கு இணங்க தயாரிக்கப்பட்ட உணவைக் குறிக்கிறது. ஹலால் இறைச்சி என்பது தொண்டை, உணவுக்குழாய் மற்றும் கழுத்து நரம்புகள் வழியாக வெட்டப்பட்ட ஒரு விலங்கின் இறைச்சியைக் குறிக்கிறது.
2022 ஆம் ஆண்டில், ஹலால் சான்றிதழை முழுமையாகத் தடை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது, மேலும் 15% மக்கள் தொகையால் 85% குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக அதில் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.