தேர்தல் முடிவுகளும் கருத்து கணிப்புகளும்

சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலின் போது முடிவுகளுக்காக காத்திருக்கும் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கருத்து கணிப்புகள் ரிசல்ட் வருவதற்கு 2 தினங்களுக்கு முன்பாக வெளியாகும். அந்த வகையில் தேர்தல் தேதி அறிவித்த பிறகு வாக்குப்பதிவு நடைபெறும் வரை எந்த வித கருத்து கணிப்புகளை வெளியிடக்கூடாது. வாக்குப்பதிவு முடிந்த மாலை 6 மணிக்கு பிறகு தான் ஒவ்வொரு தொலைக்காட்சிகளிலும் கருத்து கணிப்புகள் வெளியாகும். அந்த வகையில் பீகார் மாநில தேர்தல் நேற்று மாலை நடைபெற்று முடிவடைந்தது. இதனையடுத்து கருத்து கணிப்புகள் வெளியானது. இதில் பாஜக - ஜனதா தள கூட்டணி தான் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தெரிவித்தது. 

Continues below advertisement

அந்த வகையில், ஆளும் கட்சியான நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம் + பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. எதிர்கட்சியான மகாகத்பந்தன் (MGB) எனப்படும் காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி அமைத்துள்ளது. இதில் தனி அணியாக ஜன் சூராஜ் கட்சியை சேர்ந்த பிரசாந்த் கிஷோரும் களத்தில் உள்ளார். மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதனையடுத்து நேற்று மாலை கருத்து கணிப்புகள் வெளியானது. மொத்தமுள்ள 243 இடங்களில் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 146-167 இடங்களைப் பிடிக்கும் என்றும், மகா கூட்டணி 70-90 இடங்களைப் பிடிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஒரு சில கருத்து கணிப்புகளில் மட்டும் 100 இடங்களை மகா கூட்டணி பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டது. 

கருத்து கணிப்பு என்றால் என்ன.?

ஆனால் இந்த கருத்துகணிப்புகளை நம்பும் வகையில் இல்லை, எங்கள் கூட்டணி வெற்றி பெறும் ஆட்சி அமைப்பது உறுதி என தேஜஸ்வி யாதவ் அடித்து கூறிவருகிறார். எனவே கருத்து கணிப்பு எப்படி எடுக்கப்படுகிறது. கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட கருத்து கணிப்புகள் சரியாக இருந்ததா என்பதை தற்போது பார்க்கலாம். அந்த வகையில் கருத்து கணிப்பு என்பது ஒவ்வொரு தொகுதிகளில் உள்ள மக்களின் மன நிலையை கேட்டறிந்து இந்த கட்சிக்கு தான் வாக்களிப்பார்கள் என கணக்கிடப்படுகிறது.மேலும் வாக்கு பதிவு செய்து விட்டு வெளியே வரும் நபர்களிடம் கருத்துகளை கேட்டும் வெளியிடப்படுகிறது. அதே நேரம் ஒரு தொகுதியில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருக்கும் வகையில் சுமார் ஆயிரம் பேரிடம் மட்டுமே கருத்துகளை கேட்டும் கருத்து கணிப்பாக வெளியாகிறது. ஒரு சில நேரங்களில் கருத்து கணிப்புகள் சரியாக இருக்கும். அதே நேரம் 100க்கு 100 சதவிகிதம் அப்படியே மாற்றமாக இருக்கும். 

Continues below advertisement

நாடாளுமன்ற தேர்தலில் வெளியான கருத்து கணிப்பு

அந்த வகையில் கடந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது முக்கியமான 7  இந்திய ஊடக நிறுவனங்களின் கருத்துக் கணிப்புகளில் பாஜக கூட்டணி மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 350 முதல் 400 தொகுதிகளை கைப்பற்றும் என தெரிவித்திருந்தது. அதிலும் பாஜக தனித்து 280 தொகுதிகளை பெறும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் முடிவுகளோ மாற்றமாக இருந்தது. பாஜக கூட்டணி ஒட்டு மொத்தமாக 293 இடங்களை மட்டுமே பிடித்தது. 232 இடங்களை இந்தியா கூட்டணியும் பெற்றது. எனவே கருத்து கணிப்புகள் அனைத்தும் தவறாகவே அமைந்தது. 

2015ஆம் ஆண்டு பீகாரில் சட்டமன்ற தேர்தலின் போது ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஜனதா தளம் (ஐக்கிய) (JDU) மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மகா கூட்டணிக்கு குறைவான இடங்களே கிடைக்கும் என தெரிவித்திருந்தது. NDA கூட்டணிக்கு 114 இடங்களைக் கொடுத்தது. ஆனால்  மொத்தம் உள்ள 243 இடங்களில் 178 மகா கூட்டணி கைப்பற்றியது. பாஜக கூட்டணிக்கு 58 இடங்கள் மட்டுமே கிடைத்தது. 

பீகார் தேர்தல் கருத்து கணிப்பு

அடுத்ததாக 2020ஆம் ஆண்டு பீகார் சட்டமன்ற தேர்தலின் போது மகா கூட்டணி 150 இடங்களில் வெல்லும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணியோ சுமார் 80 இடங்களை மட்டுமே பெறும் என்று கருத்து கணிப்புகள் தெரிவித்திருந்தது. ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களை வென்றது. மகா கூட்டணி 110 இடங்களை மட்டுமே பிடித்தது. எனவே இந்த தேர்தல்களில் எல்லாம் கருத்து கணிப்பு தவறாகவே இருந்துள்ளது. எனவே கருத்து கணிப்புகள் எப்படி வந்தாலும் வாக்கு எண்ணிக்கையின் போது இவிஎம் இயந்திரங்களில் உள்ள வாக்குகளே இறுதியாக இருக்கும்