ஆளுநரை பதவியில் இருந்து ஜெகதீப் தங்கர்-ஐ நீக்கம் செய்வது தொடர்பான தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முடிவெடித்திருந்த நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை அம்மாநில ஆளுநர் முடித்து வைத்துள்ள (Proruge) சம்பவம் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.  இதற்கு, அம்மாநில மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி கடுமையான கண்டனத்தை  பதிவு செய்துள்ளார். 






இதுகுறித்து, அவர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், இந்திய அரசமைப்பின் 176-ம் பிரிவின் (2) துணைப்பிரிவு தமக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, 2022, பிப்ரவரி 12ம் தேதி மேற்குவங்க சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் இறுதிநாள் என்று அறிவிக்கிறேன்"என்று தெரிவித்தார். 






மேலும், தனது ட்விட்டரில்," எந்தவித அடிப்படையுமின்றி தவறான தகவல்களை சிலக் குறிப்பிட்ட ஊடகங்கள் பரப்பி வருகின்றனர். மாநில அமைச்சரவை அளித்த பரிந்துரையைக் கருத்தில் கொண்டு, 174 (2) (a) அரசியலமைப்பு விதியின் மூலம் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி தான் 2022, பிப்ரவரி 12ம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இறுதி நாள் என்று அறிவித்தேன்" என்று தெரிவித்துள்ளார். 


மேற்குவங்கத்தில் உள்ளாட்சி அமைப்பின் தேர்தல் காரணமாக,  பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் மாதத்தில் அம்மாநில  தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற இருந்தது. இந்த கூட்டத்தொடரில், மாநில அரசின் அன்றாட நிகழ்வுகளில் ஆளுநரின் தலையீடுகளை எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற திருணாமுல் காங்கிரஸ் கட்சி முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியானது.  


இதற்கிடையே, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வின் நிறைவு நாளான நேற்று, திருணாமுல் காங்கிர கட்சியின்  மாநிலங்களவை உறுப்பினர் சுகேந்து சேகர் ராய், விதி எண் 170ன் கீழ் தீர்மானம் ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில்,  இந்திய அரசியலமைப்பு வழங்கிய அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்தும் ஆளுநர் ஜெகதீப் தங்கரை குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. 


மேற்கு வங்க அரசியலில், முன்னெப்போதும் இல்லாத வகையில், ஆளுநருக்கும், முதலமைச்சரைத் தலைவராகக் கொண்ட மாநில அமைச்சரவைக்கும் இடையேயான மோதல் அதிகரித்துக் காணப்படுகிறது. முன்னதாக, மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி ட்விட்டரில் தளத்தில் ஆளுநரின் கணக்கை ப்ளாக் செய்தவாக அறிவித்தார். 


மாநில சட்டமன்றக் கூட்டத்தொடர்களைக் கூட்டுவதற்கும், கூட்டத்தொடரினை இறுதி செய்வதற்கும், கலைப்பதற்கும் ஆளுநர்க்கு முழுஅதிகாரத்தை இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ளது. இருந்தாலும், முதலமைச்சரைத் தலைவராகக் கொண்ட மாநில அமைச்சரவை அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் தான் ஆளுநர் ஓவ்வொரு முறையும் செயல்பட வேண்டும்.