பிரதமர் நரேந்திர மோடி குறித்த வீடியோவை மத்திய அமைச்சர் அனுராக் தகூர் வெளியிட்டுள்ளார். இப்போது இந்த வீடியோ டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
மத்தியில் ஆளும் பாஜக அரசில், விளையாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் அனுராக் தாகூர். இவர் 2008-ஆம் ஆண்டு முதல் மக்களவை உறுப்பினராக உள்ளார். அண்மையில் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், பிரதமர் மோடி பள்ளிக் குழந்தைகளுடன் உரையாடிக்கொண்டும், பாட்டு பாடிக்கொண்டும், இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டும் இருக்கிறார். இந்த வீடியோ தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
பிரதமர் மோடி, உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான வாரணாசி தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலுக்குப் பிறகு, தொகுதிக்கு தற்போதுதான் முதல்முறையாக செல்கிறார். இதில், வாரணாசியில் உள்ள அரசுப்பள்ளிக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்த பள்ளிக் குழந்தைகளுடன், இணைந்து, பிரதமர் மோடி நாட்டுபுற பாடல்களைப் பாடியும், அதுகுறித்து விளக்கியும் கூறினார். மேலும், நாட்டுப்புற பாடல்களைப் பாடிய மற்றும் பாரம்பரிய இசைக் கருவிகளை இசைத்துக்காட்டிய பள்ளிக்குழந்தைகளுடன் உரையாடிய பிரதமர் மோடி, பின்னர் அவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.
பிரதமர் மோடி அவ்வப்போது பள்ளிக் குழந்தைகளுடன் உரையாடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். குறிப்பாக பொதுத் தேர்வு காலங்களில், மாணவர்களுக்கு மன தைரியத்தினை வழங்கக்கூடிய உரைகளை மாணவர்களிடத்தில் ஆற்றுவார். தற்போது தனது சொந்த தொகுதிக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள அரசுப் பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்று வரும் குழந்தைகளுடன் பேசி, பாடி தன்னையும் அவர்களுடன் இணக்கமாக வைத்துக்கொள்ளும் வீடியோ மத்திய அமைச்சர் அனுராக் தாகூரால் வெளியிடப்பட்டது. இந்த வீடியோ தற்போது டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்