கொரோனா வைரஸின் மூன்றாவது அலை உச்சம் செல்ல ஆரம்பித்துள்ளது. கொரோனா மட்டுமின்றி உருமாற்றமடைந்த ஒமிக்ரான் வைரஸும் பரவுகிறது. இதனால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும், முகக்கவசத்தை மறக்காமல் அணிய வேண்டும் போன்ற பல்வேறு அறிவுறுத்தல்களை மத்திய, மாநில சுகாதாரத் துறை அமைச்சகங்கள் தெரிவித்துவருகின்றன.


இந்தியாவில் நாளொன்றுக்கு ஒரு லட்சமாக தற்போது கொரோனா பாதிப்பு பதிவாகிவருகிறது.  இருந்தாலும் மக்கள் மிகவும் அலட்சியத்துடனேயே நடந்துகொள்கின்றனர். அப்படிப்பட்ட சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது.


குஜராத்தின் அகமதாபாத் நகரில் மதுவன் கிரீன் பார்ட்டி பகுதியில் வசிப்பவர் சிராக் என்ற டேகோ பட்டேல்.  இவரது சகோதரர் ஊர்விஷ் பட்டேல். இவர்கள் இருவரும் நண்பர் திவ்யேஷ் மெஹாரியாவுடன் இணைந்து கடந்த 7ஆம் தேதி இரவு தங்களுடைய அபி என்ற செல்ல நாயின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.






அந்தக் கொண்டாட்டத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் என பலர் கலந்துகொண்டனர்.  ஆனால் தகுந்த இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்ற எந்த கொரோனா விதிமுறையும் அங்கு பின்பற்றப்படவில்லை.




இதுதவிர, பிரபல நாட்டுப்புற பாடகர் ஒருவரையும் வரவழைத்து, கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.  இந்தத் தகவல் காவல் துறையினருக்கு செல்ல, சம்பவ இடத்திற்கு சென்று தொற்று நோய்கள் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Role of Night Curfew: கொரோனா இரவு நேர ஊரடங்கு தேவையா? தேவையற்றதா? தரவுகள் சொல்வது என்ன?


அறிவிக்கப்படும் எண்ணிக்கையை விட 7 மடங்கு கொரோனா இறப்பு அதிகம்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்