கன்னையா லாலை கொடூரமான முறையில் கொலை செய்த இரு கொலையாளிகளை விசாரணைக்காக ஜெய்ப்பூர் நீதிமன்றத்திற்கு இன்று காவல்துறையினர் அழைத்து வந்தனர். அப்போது, வெளியே இருந்த கும்பல் ஒன்று அவர்களை சரமாரியாக தாக்கியது. தாக்கியது மட்டுமின்றி, அவர்களின் அணிந்திருந்த ஆடைகளைக் கிழித்தனர். 


 






ஆனால், வெளியே காத்துக்கொண்டிருந்த வாகனத்தில் அவர்களை  ஏற்றியதால் அவர்களுக்கு பெரும் காயம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. 48 வயதான கன்னையா லாலை கொலை செய்து அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.


பின்னர், ரியாஸ் அக்தாரி மற்றும் கோஸ் முகமது ஆகியோர் மற்றொரு வீடியோவை வெளியிட்டனர். அதில் அவர்கள் கொலையைப் பற்றி பெருமையாக பேசியது மட்டும் இன்றி பிரதமர் மோடியை குறிவைத்திருப்பதாக மிரட்டினர். கொலை நிகழ்ந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு அக்தாரியும் முகமதுவும் கைது செய்யப்பட்டனர். 


மேலும் கன்னையாவின் கொலையில் சதி செய்ததாகக் கூறப்படும் மேலும் இருவர் பின்னர் கைது செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் ஜெய்ப்பூரில் உள்ள தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். 


 






நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் பல வழக்கறிஞர்கள் "பாகிஸ்தான் முர்தாபாத்" மற்றும் "கன்னையாவை கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை வழங்குங்கள்" போன்ற கோஷங்களை எழுப்பினர். மேலும் கொலையாளிகளை ஜூலை 12ஆம் தேதி வரை தேசிய புலனாய்வு முகமையின் காவலில் வைக்க நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.


அவர் கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, கன்னையா லால் உள்ளூர் காவல்துறையிடம், சமூக ஊடகம் மூலம் தனக்கு மிரட்டல்கள் வந்ததாகக் கூறி இருக்கிறார். முகமது நபிகள் பற்றி கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண