ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்த தையல்காரர் ஒருவரின் தலையை வெட்டி கும்பல் ஒன்று கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நுபுர் சர்மா விவகாரம் தொடர்பாக சமூக வலைதளத்தில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக, உதய்பூர், மால்தாஸ் தெருவில் இந்தக் கொலை சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. மால்தாஸ் தெரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கலவரங்கள் நிகழாமல் இருக்க கடைகள் அடைக்கப்பட்டு, காவல் துறையினர் தயார்படுத்தப்பட்டு உஷார் நிலையில் உள்ளனர்.
கொலை செய்யப்பட்ட தையல்காரரிடம் இவ்வழக்கு தொடர்பாக ஏற்கெனவே காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நேற்று இருவரை கைது செய்தனர்.
இவர்கள் சிக்கியது எப்படி என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. முன்னதாக, கொலை செய்தவிட்டு மோட்டார் சைக்கிள் மூலம் நகரத்திலிருந்து தப்பிக்க அவர்கள் முயற்சி செய்துள்ளனர். காவல்துறையினர் அவர்களை இடைமறிப்பதற்கு முன்பு ஹெல்மெட் போட்டு கொண்டு முகத்தை மறைத்துள்ளனர்.
இதுகுறித்து விரிவாக விவரித்த ராஜ்சமந்த் காவல்துறை தலைவர் சுதீர் சவுத்ரி, "தப்பிக்க முயன்ற இருவரும் உதய்பூரின் புறநகர்ப் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் பைக்கை வேகமாக ஓட்டிச் சென்றனர்தடுப்பு
தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர், அவர்களை நிற்கும் படி சைகை காட்டியுள்ளனர்.
இருவரும் தப்ப முயன்றபோது, போலீசார் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். காங்கிரஸ் சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர் நிதின் அகர்வால் ட்வீட் செய்த வீடியோவில் இவை அனைத்தும் பதிவாகியுள்ளது.
18 மற்றும் 20 வயதுடைய இரண்டு மகன்களின் தந்தையான கன்னையா லால், முகமது நபி பற்றி டிவியில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து தற்போது பாஜகவால் இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக தலைவர் நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். இதற்காக, தனக்கு கொலை மிரட்டல் வருவதாக அவர் ஏற்கனவே புகார் அளித்திருந்தார்.
அவரின் குடும்பத்துக்கு 31 லட்சம் உதவி தொகை அளிக்கப்படும் என்றும், இரு மகன்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் மாநில அரசு அறிவித்துள்ளது.