குடிபோதையில் இளம்பெண் ஒருவர் காவல்துறை அதிகாரியை திட்டுவதும் அவரை தாக்க முற்படுவதுமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.







குடிபோதையில் இளம்பெண்கள் :


பள்ளிக்கு செல்லும் சிறுமிகள் குடிபோதையில் ரகளை செய்வது , சிறுவர்கள் சிகெரெட் பிடிப்பது என அன்றாடம் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோக்கள் எதிர்கால தலைமுறைகள் குறித்த அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த நிலையில் இளம்பெண் ஒருவர் காவல்துறை அதிகாரியை தகாத வார்த்தைகளில் திட்டியும் , முடியை பிடித்து இழுத்து எட்டி உதைக்க எத்தணிப்பது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. குடிபோதையில் சென்ற இளம்பெண்கள் சிலரை காவல்துறையினர் நள்ளிரவு ரோந்து பணியின் போது மடக்கி பிடித்துள்ளனர். அவர்களை விசாரணை செய்த சமயத்தில் காவல்துறையினரை நோக்கி வெள்ளை நிற டி-ஷர்ட் அணிந்த இளம்பெண் ஒருவர் தகாத வார்த்தைகளில் திட்ட துவங்குகிறார். பின்னர் காவல் அதிகாரியை சீண்டும் பெண், அவரின் தலை முடியை பிடித்து இழுத்து, எட்டி உதைக்க முயற்சி செய்கிறார். காவலர் அணிந்திருந்த மாஸ்கை கழற்றி அதனை கிழிக்கவும் முயற்சிக்கிறார். நடு ரோட்டில் படுத்துக்கொண்டு உச்சபட்ச போதையில் இந்த பெண் செய்யும் அநாகரிகமான செயல்களை அங்கிருந்த வாகன ஓட்டுநர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர் . அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


வீடியோ கீழே :























இந்த சம்பவம் நடைப்பெற்ற இடம் எது என்பது சரியாக தெரியவில்லை. என்றாலும் கூட காவல் அதிகாரியின் உடையில் மாகாராஸ்டிரா காவல்துறை என எழுதப்பட்டிருக்கிறது. வீடியோவில் இருக்கும் பெண் மராத்தியில் பேசுவதால் , மகாராஸ்டிரா பகுதியில் அரங்கேறியிருக்கலாம் என யூகிக்க முடிகிறது.