நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 


தற்போதுவரை  கோவிஷீல்டு, கோவாக்சின், ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், மத்திய அரசு  ஹைதராபாத்தை சேர்ந்த பயாலஜிக்கல்-இ நிறுவனம், அமெரிக்காவை சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த கோர்பேவாக்ஸ்-ஐ 18-வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக செலுத்திக்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கோர்பேவாக்ஸ் தடுப்பூசி தற்போது 5 முதல் 14 வயது வரை உள்ளவர்களுக்கு மட்டுமே செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


பூஸ்டர் தடுப்பூசி:


கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க இருக்கும் வழிமுறைகளில் முதன்மையானதாக கருதப்படுவது தடுப்பூசி. இதுவரை நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 207 கோடி 26 லட்சத்தை கடந்துள்ளது. இந்நிலையில், பூஸ்டர் தடுப்பூசி வழிமுறை குறித்து மத்திய அரசு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.


கோவேக்சின் அல்லது கோவிஷீல்டு இவை இரண்டில் ஒன்றை இரண்டு தவணைகளில் செலுத்தி கொண்டவர்கள், அதையே பூஸ்டர் தடுப்பூசியாக செலுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 


அப்படியிருக்க, கோவேக்சின் அல்லது கோவிஷீட்டு இரண்டில் எதை முதல் மற்றும் இரண்டு தவணைகளில் செலுத்தி இருப்பின், 6 மாதங்கள் ஆனவர்கள், இனி கோர்பேவாக்ஸ்-யை பூஸ்டர் தடுப்பூசியாக செலுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 வயது பூர்த்தியடைந்த நபர்களுக்கு கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த  மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.


இது தொடர்பாக பயாலஜிக்கல்-இ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,  கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி போட்டுகொண்டவர்களும் பூஸ்டர் தடுப்பூசியாக கோர்பேவாக்ஸ் பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கப்பட்ட நாட்டின் முதல் தடுப்பூசி என்ற பெருமையை பெற்றிருக்கிறது.


இந்தத் தடுப்பூசிகள் நாளை முதல் தகுதியானவர்கள் https://www.cowin.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து கோபோர்வேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண