பாம் ஜுமைராவில் முகேஷ் அம்பானி வாங்கியுள்ள மிக ஆடம்பரமான விலை உயர்ந்த மாளிகை அனைவரின் ஆர்வத்தையும் தூண்டியுள்ளது. முகேஷ் அம்பானி மேற்கொண்ட 639 கோடி ரூபாய் ஒப்பந்தம், துபாய் ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் சாதனையை படைத்துள்ளது.
முகேஷ் அம்பானி வாங்கியுள்ள மாளிகை குறித்து பல்வேறு விதமான செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ள நிலையில், அதன் சுவாரஸ்ய தகவல்களை கீழே காண்போம்.
துபாய் பாம் ஜுமைராவில் மிக ஆடம்பரமான மாளிகையை வாங்கி இருப்பதன் மூலம் அதிக மதிப்பு கொண்ட ஒப்பந்தத்தில் முகேஷ் அம்பானி கையெழுத்திட்டிருப்பதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த அதிக மதிப்பு கொண்ட ஒப்பந்தம் இந்த ஆண்டு ஏப்ரலில் பெல்லிவியூ ரியல் எஸ்டேட்டின் கோனார் மெக்கேவால் இறுதி செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் இந்த ஆண்டு துபாயில் சொத்து சந்தை வலு பெற்று வருவதற்கு ஒரு சான்றாகும்.
பாம் ஜுமைராவின் விலை உயர்ந்த மாளிகையை முகேஷ் அம்பானி வாங்கியிருப்பதாக செய்தி வெளியாக உள்ளது. எனவே, அதை வாங்கிய பெல்லிவியூ ரியல் எஸ்டேட் சொத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானியாக இருக்கலாம் என்பதை யூகிக்க முடிகிறது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை அம்பானியின் குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
சொத்தை விற்ற ஏஜென்சி அதன் அதிகாரப்பூர்வ யூடியூப் தளத்தில் சொத்தின் வீடியோவையும் பதிவேற்றியது. வீடியோவில் உள்ள வில்லாவைப் பாருங்கள்.
- பாரசீக வளைகுடா நீரால் சூழப்பட்ட அழகிய தீவு, வான்வழி காட்சியுடன் வீடியோ தொடங்குகிறது. பாம் ஜுமைரா ஒரு செயற்கைத் தீவாகும். இது அதன் பெரும் பணக்கார காலனிகளுக்கும் பளபளப்பான ஹோட்டல்களுக்கு பெயர் பெற்றது. அதன் கட்டுமானம் 2001 இல் தொடங்கியது. இது பாம் தீவுகள் என்று அழைக்கப்படும் ஒரு பெரிய தீவுகளின் ஒரு பகுதியாகும்.
- அடுத்த காட்சியில், பார்வையாளர்கள் வெளியில் இருந்து மாளிகையின் காட்சியைப் பார்க்கலாம். கடற்கரையை எதிர்கொள்ளும் வில்லா தீவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. அதில் அனைத்து ஆடம்பரமான வசதிகளும் உள்ளன.
- இந்த மாளிகையில் மொத்தம் பத்து படுக்கையறைகள், ஒரு தனியார் ஸ்பா மற்றும் உட்புற மற்றும் வெளிப்புற குளங்கள் உள்ளன. ஆடம்பரமான வில்லா இத்தாலிய பளிங்கு மற்றும் அழகான அதிநவீன தலைசிறந்த படைப்புகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
- 3,000 சதுர அடி கொண்ட அந்த பெரிய மாளிகை, ரிலையன்ஸ் நிறுவனத்தால் புதுப்பிக்கப்படும்.
- மாளிகையின் உரிமையாளர் தீவின் கடற்கரைகளை அனுபவிக்க வேறு எங்காவது செல்ல வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், மாளிகையில் 70 மீட்டர் நீளமுள்ள தனியார் கடற்கரை உள்ளது.