இந்தியா முழுவதும் உள்ள எந்த  நியாயவிலைக்கடைகளிலும் ரேசன் பொருள்களை வாங்க வேண்டும் என்று நினைத்தால் , முதலில் ஆதார் எண்ணுடன் ரேசன் கார்டினை இணைப்பது அவசியமான ஒன்று. இதனை வெறும் 5 நிமிடங்களில் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளமுடியும்.


நாடு முழுவதும் சுமார் 5.4 லட்சம் நியாய விலைக்கடைகளின் மூலம் மக்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை, மண்ணெண்ணெய், போன்ற அத்தியாவசியப்பொருள்கள் அனைத்தும் குறைந்தவிலைக்கு அரசின் மூலம் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. ஆனால் எந்த ஊரில் ரேசன் கார்டு உள்ளதோ? அங்கு சென்று தான் மக்கள் இதுவரை பொருள்களை வாங்கும் நிலை இருந்துவந்தது.  இதன் காரணமாக  சொந்த ஊரை விட்டு பிற மாநிலங்களுக்கு சென்ற மக்கள் ரேசன் கடைகளில் பொருள்களை வாங்க முடியாமல் இருந்தது. ஒரு சமயங்களில இரண்டு ரேசன் கார்டுகளையும் மக்கள் பயன்படுத்தும் நிலை இருந்துவந்தது. இதனைத்தடுக்கும் விதமாக தான் அனைத்து ரேசன் கார்டுளையும் ஆதார் எண்ணுடன் இணைத்துவிட்டால், மத்திய அரசு தெரிவித்துள்ளது படி, “ ஒரே நாடு ஒரே ரேசன்“ என்ற திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும் என தெரிவித்தது.





எனவே இந்த நடைமுறையைப்பின்பற்றினால் நாம் இனி எந்த மாநிலத்தில் எப்போது வேண்டுமானாலும் ரேசன் பொருள்களை வாங்க முடியும். இந்நிலையில் ஆன்லைனில் ஆதாரை இணைப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்து தெரிந்துக்கொள்வோம்.


முதலில் அரசின் https://tnpds.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.


பின்னர் அந்தப்பக்கத்தில் உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரை கொடுத்து, கேப்ட்சா எழுத்துகளை பதிவு செய்து கிளிக் செய்ய வேண்டும். பின்னர் உங்களுக்கு  7 இலக்க ஓடிபி எண் வரும்.


அதனைப்பதிவிட்டு  மற்றொரு பக்கத்தில் உள்நுழைய வேண்டும். இதில் உங்கள் ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் விவரங்கள் இருக்கும்.


  அதில் கேட்கப்பட்டிருக்கும்  ஆதார் எண்கள் என்பதைக் கிளிக் செய்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஆதார் விவரங்களை பதிவு செய்யாவிட்டால், ஸ்கேன் என்பதை தேர்வு செய்து ஆதார் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.


மேலும் இதேப்போன்று ஆதார் இணையதளப்பக்கத்திற்கு சென்றும் ரேசன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்துவிடமுடியும். இதோ அதற்கான வழிமுறைகள்.


ரேஷன் கார்டில் ஆதாரினை பதிவு செய்வதற்கு uidai ன் அதிகாரபூர்வ தளத்தின் மூலமாகவும் செய்யலாம்.


 முதலில், https://uidai.gov.in/ என்ற அதிகாரபூர்வ தளத்திற்குச் செல்ல வேண்டும். பின்னர் start now என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். இப்பொழுது, உங்களது முகவரி மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை கொடுத்து, ரேஷன் கார்டு பெனிபிட் என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.


இதனையடுத்து அந்தப் பக்கத்தில் உங்களது ஆதார் கார்டு நம்பர் மற்றும் இமெயில் ஐடி மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். பின்னர், பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும்.


இதில் உங்களது ஓடிபியை உள்ளிட்டு செய்து சமர்ப்பித்தால் உடனே உங்களது ஆதார் மற்றும் ரேஷன் கார்டு இணைப்பு புதுப்பிக்கப்படும்.