வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார்  எண்ணை இணைப்பதற்கான அவகாசம் 2024ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதியுடன் கால அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில் மேலும் ஓராண்டு அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளளது.


ஆதார்


ஆதார் அட்டை என்பது இந்திய தனிநபர்  அடையாள ஆணையத்தின் 12 இலக்க எண்களைக் கொண்டது. அதில் சம்பந்தப்பட்ட நபரின் பெயருடன், அவரது புகைப்படம், பால், பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, பயோமெட்ரிக்( கைரேகை, கருவிழி, உடற்கூறு) விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும். மேலும் ஆதார் கார்டு என்பது இந்தியாவில் இருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். வெளிநாட்டு குடியுரிமைப் பெற்ற இந்தியர்களுக்குக் கிடையாது. இந்த அட்டையை பெறுவதற்கு சாதி, மதம் குறிப்பிட வேண்டியது அவசியம் இல்லை. இந்த ஆதார் கார்டு எண் சமையல் எரிவாயுவுக்கான மானியம் பெறுவது உள்ளிட்ட அரசின் பல்வேறு மானியங்கள் மற்றும் நலத்திட்டங்கள், சேவைகளைப் பெற உதவுகிறது.


பல்வேறு சேவைகளுக்கு ஆதார் கார்டு உதவும் நிலையில், முன்னதாக பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதை மத்திய அரசு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. காலக்கெடுவை மத்திய அரசு பல முறை நீட்டித்தது. அதன் கடைசியாக மார்ச் 31ஆம் தேதிக்குள் பான் ஆதாரை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதான் உடன் இணைக்காவிட்டால் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பான் கார்டு செயலிழந்துவிடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 


வாக்காளர் அடையாள அட்டை


இதனை அடுத்து, தற்போது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டை இணைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கு கால அவகாசம் மார்ச் 31அம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில், தற்போது கால அவகாசத்தை மத்திய அரசு நீடித்து உத்தரவிட்டுள்ளது. அடுத்த ஆண்டு 2024ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.


எப்படி இணைப்பது?



  • முதலில் கூகுள் பிளே (google play) மற்றும் ஆப்பிள் ஆப் (apple app) அப்ளிகேஷனில் இருந்து வாக்காளர் ஹெல்ப்லைன் (Voter helpline) செயலியை பதிவிறக்கவும்.

  • அடுத்த முகப்பில் தோன்றும் voter registration என்ற option-ஐ கிளிக் செய்ய வேண்டும்.

  • அதன்பின், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட உங்களின் அதிகாரப்பூர்வ மொபைல் எண்ணை உள்ளிட்டு, அந்த எண்ணிற்கு வரும் OTP எண்ணை பதிவிட வேண்டும்.

  • அடுத்ததாக, Next என்ற option-ஐ கிளிக் செய்து, வாக்காளர் அடையாள அட்டை எண் மற்றும் உங்கள் மாநில விவரங்களை பதிவிடவும்.  

  • மேற்கண்ட விவரங்களை பதிவு செய்தவுடன் proceed என்ற option-ஐ கிளிக் செய்ய வேண்டும்.

  • பின்னர், 6b முகப்பு பக்கத்தில் உங்கள் விவரங்களை உறுதிப்படுத்த confirm என்ற option-ஐ கிளிக் செய்தவுடன், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைத்ததற்கான மெசெஜ் ஒன்று உங்கள் எண்ணிற்கு வரும்.