கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விஸ்மயா தற்கொலை வழக்கில், அவரது கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


இந்த வழக்கில் விஸ்மயா கணவரை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்திருந்தது. வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட குற்றங்களுக்காக கிரண் குமாரு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


கேரள நீதிமன்றம் தீர்ப்பு விவரம்:


கடந்த ஆண்டு, விஸ்மயா (Vismaya) கிரண் குமார் வீட்டில் இறந்து கிடந்தார். இவரை கணவர் கிரண்குமார் தொடர்ந்து வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்துள்ளார். இந்த வழக்கில், கிரண் குமார் மொபைலில் இருந்து 5 லட்சம் மெசேஜ்கள், விஸ்மயாவின் ஆடியோ மெசேஜ்கள் மற்றும் விஸ்மயாவின் உடற்கூராய்வில் அவர் உடலில் இருந்த காயங்கள் உள்ளிட்ட பல  டிஜிட்டல் ஆதாரங்களின் அடிப்படையில் விஸ்மயா மரணத்திற்கு கிரண் குமார் காரணம் என்று கூறி அவரை குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது.


வரதட்சணை கொடுமை, தற்கொலைக்கு தூண்டிய ஆகியவற்றின் கீழ் கிரண் குமாருக்கு தண்டை குறித்து நாளை அறிவிக்க இருக்கிறது கேரள நீதிமன்றம். 


 தனது கணவர் தன்னைக் கொடுமை செய்வதாக விஸ்மயா தனது தந்தையிடம் அழுது கதறும் ஆடியோ கடந்த வாரம் வெளியாகியிருந்தது.  கிரண்குமாரை குற்றவாளி என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


வழக்கு பின்னணி:


 ஆயுர்வேத மருத்துவத்துக்குப் படித்து வந்த 22 வயது விஸ்மயாவை அவரது குடும்பம் இரண்டு வருடத்துக்கு முன்பு கோட்டயத்தைச் சேர்ந்த கிரண் என்பவருக்குத் திருமணம் செய்து வைத்தது. தனது பெண் கணவன் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதற்காக நூறு சவரன் நகை, ஒரு ஏக்கர் நிலம், 9 லட்சத்துக்குக் கார் என வரதட்சணையை வாரி இறைத்திருக்கிறது குடும்பம். இத்தனைக் கொடுத்தும் விஸ்மயா அந்த வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கவில்லை. கிரண் விஸ்மயாவை அடித்துத் துன்புறுத்தியிருக்கிறார்.  திருமணமான ஆறு மாதத்திலேயே தன் பெற்றோர் வீட்டுக்குத் திரும்பிவிட்டார் விஸ்மயா. ஆனால் எப்படியோ சமாதானம் செய்து அவரைத் தன் வீட்டுக்கு மீண்டும் அழைத்துச் சென்றிருக்கிறார் கிரண். கிரண் அழைத்துச் சென்ற பிறகு தன் பெற்றோரிடம் பேசுவதையே முற்றிலுமாகத் தவிர்த்திருக்கிறார் விஸ்மயா. அதிகபட்சமாகத் தனது அம்மாவுடன் மட்டுமே அவரது உரையாடல் இருந்திருக்கிறது.


இதற்கிடையேதான் கிரண் தன்னை அடித்துத் துன்புறுத்திய புகைப்படங்களை தனது சகோதரருக்கு அனுப்பியிருக்கிறார் விஸ்மயா. வரதட்சணையாக அளித்த கார் வேண்டாம் அதற்கு பதிலாகப் பெற்றோரிடம் பணமாக வாங்கிவரும்படி விஸ்மயாவை வற்புறுத்தியிருக்கிறார் கிரண். முடியாது எனச் சொல்லவும் அடித்துக் கொடுமைப் படுத்தியிருக்கிறார். காரில் இந்தச் சண்டை நிகழ்ந்திருக்கிறது. விஸ்மயா காரை விட்டு வெளியேற முயற்சிசெய்ய அவரை முடியை பிடித்து இழுத்துக் கொடுமை செய்ததாகத் தனது சகோதரருக்கு அனுப்பியிருக்கும் வாட்சப் சாட்டில் சொல்லியிருக்கிறார்.


இந்தச் சம்பவம் நடந்த இரண்டு நாட்களில்தான்  தனது கணவர் வீட்டில் பிணமாகக் கிடந்திருக்கிறார் விஸ்மயா. கொலையா தற்கொலையா என்கிற காரணம் தெரியவில்லை என்றாலும் இது வரதட்சணைக் கொடுமையால் நிகழ்ந்த மரணம். கேரள மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில்தான் உயர்நீதிமன்றம் கிரண் குமார் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.