ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகேயுள்ள தொழிற்சாலை பகுதியில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்டோர் உடல்நிலைக்குறைவால் பாதிக்கப்பட்டனர். அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


ஆந்திரப் பிரதேசத்தின் அனகாபல்லே மாவட்டத்தில் உள்ள பிராண்டிக்ஸ் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள ஆடை உற்பத்தி பிரிவில் எரிவாயு கசிவு ஏற்பட்டதில் குறைந்தது 50 தொழிலாளர்களுக்கு இந்த உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. எரிவாயு கசிவு ஏற்பட்டதையடுத்து தொழிலாளர்கள் குமட்டல் மற்றும் வாந்திக்கு உள்ளாகினர். 


இது குறித்து தெரிவித்துள்ள போலீசார், பிராண்டிக்ஸ் வளாகத்தில் எரிவாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 50பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வளாகத்தில் உள்ள அனைவரையும் வெளியேற்றும் பணி தொடர்கிறது என்றார்.