கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு நகரம் விரைவில் தெரு நாய்கள் இல்லாத ஒன்றாக மாற்றுவதற்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கர்நாடக மாநிலத்தின் கால்நடை பராமரிப்பு அமைச்சர் பிரபு செளகான் (Prabhu Chauhan) தெரிவித்துள்ளார்.


பெங்களூரு நகரில் தெரு நாய்களின் தொல்லையால் அதிகமான புகார்கள் வருவதால், கர்நாடக கால்நடை பராமரிப்பு அமைச்சகம் (animal husbandry department) அந்நகரில் தெரு நாய்கள் இல்லாத ஒன்றாக மாற்றுவது குறித்து சிந்தித்து திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளது.  பெங்களூருவில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மனிதர்களை நாய் கடிப்பது மற்றும் ரேபிஸ் வைரஸ் தொற்று பரவல் உள்ளிட்டவைகள் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. அதை தடுக்கும் நோக்கில், பெங்களூருவை தெரு நாய்கள் இல்லாத நகரமாக்கும் முயற்சிகளில் கர்நாடக மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. 


இதுகுறித்து அமைச்சர் பிரபு செளகான் கூறுகையில், “தெரு நாய் சரியான முறையில் பராமரிக்கப்பட வேண்டும். தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடுவதன் மூலம் மக்களிடம் ஏற்படும் அச்சத்தைத் தவிர்க்க முடியும். மேலும், தெரு நாய்களுக்கென தனியாக ஒரு இருப்பிடத்தை உருவாக்கி அங்கு மீட்கப்படும் நாய்கள் அங்கு வசிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதனால் பொதுமக்கள் நாய்களின் தொல்லைகளில் இருந்தும், நாய்களால் ஏற்படும் அச்சத்தில் இருந்தும் விடுபட முடியும்.” என்று தெரிவித்துள்ளார்.






பிரபு செளகான் கர்நாடக மாநிலத்தில் உள்ள  Bruhat Bengaluru Mahanagara Palike (BBMP) என்ற துறையினருடன் ஆலோசனை நடத்தினார், இதில் நாய்களின் பிறப்பு வீதத்தை குறைக்கும் வழிகள் குறித்தும் அதற்கான தடுப்பூசிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 


2019 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, நகரில் 51 சதவீதம் தெரு நாய்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரில் நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுப்பதில் நிறைய சவால்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், நாய்களை பிடிப்பதும் ரொம்பவே சவாலானது என்றும் BBMP அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  


10 முதல் 15 நாய்களை பிடிப்பதற்கு முயற்சி செய்தால், ஒன்று இரண்டைதான் பிடிக்க முடிவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். 


முன்னதாக, பெங்களூரூவில் உள்ள காபான் பூங்காவில் (Cubbon Park) நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள், பூங்காவிற்கு வருவபர்கள் தங்களது செல்லப்பிராணிகளை குறிப்பாக நாய்களை அழைத்துவர அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதல் தடை வித்திக்க இருப்பதாக கர்நாடக மாநில தோட்டக்கலை துறை (Karnataka Horticulture Department) அறிவித்ததற்கு அங்கு எதிர்புகள் எழுந்தன.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண