தெலங்கானாவில் வழக்கத்தைவிட அதிகமாக பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், பாகுபலி படத்தினைப் போல் குழந்தையினை தலைக்கு மேல் தூக்கிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


தெலங்கானா மாநிலத்தில், கடந்த வாரம் முதலே கனமழை பெய்து வருகிறது.  இதனால், தெலங்கானாவின் வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களான, நல்கொண்டா, சூர்யாபேட், மெகபூபபாத், புவனகிரி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால்  மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்பதாம் தேதி முதல் 13ம் தேதி வரை 219.7 மிமீ அளவிற்கு மழை பெய்துள்ளது. இம்மழை வழக்கத்தை விட 455 மடங்கு அதிகமாக பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


கடந்த ஐந்து நாட்களாக பெய்து வரும் கனமழையால் தெலுங்கானாவின் வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்கள் முழுவதும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.  குறிப்பாக கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஆற்றினை ஒட்டியுள்ள ஊர்களுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் தொடர்ந்து மக்கள் தங்களைக் காத்துக் கொள்ள பல்வேறு இடங்களுக்கு நகர்ந்து கொண்டு உள்ளனர்.  இவ்வாறு நகர்கையில் ஒருவர் ஒரு குழந்தையினை கொண்டு கடும் வெள்ளத்திற்கு மத்தியில் கொண்டு செல்லும் காட்சி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.  வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் பணியில் தெலுங்கான மாநில அரசும்,  தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. 






இதற்கு காரணம், பிராமாண்ட இயக்குனர் என பெயர் பெற்ற எஸ்.எஸ். ராஜ மௌளி இயக்கத்தில்  இரண்டு பாகங்களாக வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் பாகுபலி. இப்படத்தில் படத்தின் நாயகன், பிரபாஸ் அறிமுக காட்சியில், நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆற்று வெள்ளத்தில், குழந்தையினை மூழ்கும் ஆற்று நீரில், மேலே தூக்கிச் செல்வார். இந்த காட்சியினை, தெலுங்கானாவில்  ஒருவர் மூன்று மாத ஆண் குழந்தையினை மார்பளவு  வெள்ளத்தில் தூக்கிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண