கேரளாவின் பல பகுதிகளில் நேற்றைய தினம் பலத்த காற்றுடன் பெய்த மழை கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. 


கடந்த சில வாரங்களாக கேரளாவில் தென் மேற்கு பருவமழை பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் பெய்த கனமழையால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து  கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் தாழ்வான பகுதிகள், ஆற்றங்கரைகள் மற்றும் மலைப்பகுதிகளில் வசிப்பவர்களை மேடான பகுதிக்கு சென்று பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்தது.






இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த 24 மணி நேரத்தில் கேரள மாநிலத்தில் 6.45 செ.மீ முதல் 11.55 செ.மீ வரை மழை பெய்யக்கூடும். கேரளாவில் உள்ள மலைப்பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்திருந்தது. இதனால் ஜூலை 15 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்திருந்தது.






இதனிடையே கொச்சியில் உள்ள குத்தமங்கலம், கொத்தமங்கலம், திருக்காரியூர் ஆகிய கிராமங்களில் 44 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் இரண்டு வீடுகள் முற்றாக இடிந்து நாசமாகியுள்ளன. சுமார் 10 நிமிடங்கள் நீடித்த பலத்த சூறாவளி காற்றால் மரங்கள், மின்கம்பங்கள் சாலைகளில் சாய்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதன் வீடியோக்கள் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண