சட்டை அணியாத தொழிலாளி ஒருவர் அழுக்குத் தரையில் சோயா சாப்பின் மீது உருளும் வைரல் வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் இணையத்தில் கொந்தளித்துள்ளனர்.
சட்டை அணியாத, வெறுங்கால்களுடன் இருந்த ஒரு தொழிலாளி, அழுக்குத் தரையில் தயாரிக்கப்பட்டுக்கொண்டிருந்த சோயா சாப் கலவையின் மீது உருண்டுகொண்டிருந்தார். மற்றவர்கள் அவரைத் தொடர்ந்து இழுத்துக்கொண்டும் அவர் மீது தண்ணீர் ஊற்றிக்கொண்டும் இருந்தனர். நொய்டாவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த கவலைகள் மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளன. மிகவும் சுகாதாரமற்ற சூழ்நிலைகளில் தொழிலாளர்கள் சோயா சாப் தயாரிப்பதைக் காட்டுவதாகக் கூறப்படும் அந்த வீடியோ பார்த்த நெட்டிசன்கள் கொந்தளித்துள்ளனர். உணவுப் பாதுகாப்புத் தரங்களைக் கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளையும் வைத்துள்ளனர்.
இந்த வீடியோ, நொய்டாவின் செக்டர் 27-ல் உள்ள சோயா சாப் தயாரிக்கும் ஆலை ஒன்றில் படமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதில், தொழிற்சாலையின் தொழிலாளர்கள் சுகாதாரமற்ற சூழலில் அந்த உணவுப் பொருளைக் கையாள்வதும், சட்டை அணியாத ஒரு தொழிலாளி சோயா சாப் கலவையின் மீது உருட்டுவதும், மற்றவர்கள் அவரை இழுத்துச் செல்வதும் காணப்படுகிறது.
அழுக்குத் தரையில் பரவியிருந்த கலவையின் மீது அவர் தொடர்ந்து தவழ்ந்து சென்றபோது, அவர்கள் அவர் மீது தண்ணீர் ஊற்றினர். அவர்கள் அனைவரும் வெறுங்காலுடன் நடந்து செல்வது காணப்பட்டது. பின்னணியில் ஒரு தொழிலாளி, எந்தவித சுகாதார விதிமுறைகளையும் பின்பற்றாமல் சோயா சாப் தயாரித்துக் கொண்டிருந்தார். மற்றவர்கள் சட்டையில்லாத அவரை தொடர்ந்து இழுத்துச் சென்றனர்.
இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் மக்களைப் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. மேலும், உணவு உற்பத்தி ஆலைகளில் பின்பற்றப்படும் சுகாதார நடைமுறைகள் குறித்துப் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். பலர் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளைக் குறிப்பிட்டு, இவ்விஷயத்தை விசாரிக்கவும், இது போன்ற உணவு தயாரிப்பு வசதிகளில் கடுமையான ஆய்வுகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தியுள்ளனர்.
