செல்லப்பிராணிகள் பலரின் வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத முக்கிய அங்கமாக இருக்கின்றன. மேலும் ஒரு அன்பான விலங்கை இழப்பது மிகவும் வேதனையாகவும் வலியாகவும் இருக்கும். மனித-விலங்கு பிணைப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது.குறிப்பாக, நாய் அல்லது பூனை பிரியர்களுக்கு அவர்களின் செல்லப்பிராணிகள் குடும்ப உறுப்பினர்களைப் போல இருக்கும். இப்போதெல்லாம், பல உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளுக்கு மற்ற மனிதர்களுக்குச் செய்வது போல, கண்ணியமான இறுதிச் சடங்குகளை நடத்துவதன் மூலம் பொருத்தமான பிரியாவிடை கொடுக்க முயற்சி செய்கிறார்கள். அப்படியான ஒரு பாசக் கதை ஒன்று ஒடிசாவின் பரலகெமுண்டியில் அண்மையில் நிகழ்ந்துள்ளது.





அங்கு ஒரு குடும்பம் தங்கள் செல்ல நாயான அஞ்சலி இறந்ததை அடுத்து அவளுக்கு கண்ணீருடன் விடைகொடுத்துள்ளது. அந்த நாய் 17 ஆண்டுகளாக குடும்பத்துடன் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, இந்து சமயத்தின் பாரம்பரிய முறைப்படி இறுதிச் சடங்குகளையும் குடும்பத்தினர் செய்தனர். துன்னு கவுடா என அடையாளம் காணப்பட்ட நாயின் உரிமையாளர் தனது செல்லப்பிராணிக்கு மேளக்காரர்களுடன் இறுதி ஊர்வலத்தை மேற்கொண்டார் மற்றும் ஏராளமான மக்களுடன் கலந்துகொண்டார்.


 


முன்னதாக, ஒடிசா மாநிலத்தில் வேறொரு சம்பவமாக அங்கே அமையவுள்ள எஃக் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


ஓடிசாவில் அமைய உள்ள ஜேஎஸ்டபிள்யூ எஃகு ஆலைக்கு, எதிர்ப்பு தெரிவித்து தின்கியா கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், தங்களுக்கு லாபம் தரும் வெற்றிலை, திராட்சைத் தோட்டங்கள் போன்ற தொழில்கள் நசுங்கி விடும் என்றும் எச்சரிகின்றனர். 


சனாயாக ரீதியில், போராட்டம் நடத்திவரும் கிராம மக்கள் மீது ஒடிசா அரசு கடுமையான அடக்குமுறையை செலுத்திவருகிறது. கடந்தாண்டு, டிசம்பர் மாதம் போராட்த்தை அடக்கும் விதமாக உள்ளூர்மட்ட தலைவர்களை காவல்துறை கைது செய்தனர். இந்நிலையில், கடந்த 14ம் தேதி அரசின் தொடர் அடக்குமுறையை எதிர்த்து, 500க்கும் மேற்பட்ட தின்கியா கிராம மக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர். அப்போது, கிராம மக்களை சுற்றி வளைத்த காவல்துறையினர், பொதுமக்கள் மீது கடுமையான தடியடியை நடத்தியுள்ளனர். பேரணியில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்பதையும் பொருட்படுத்தாமல், அவர்களின் அடிப்படை மாண்பைக் கெடுக்கும் வகையில் அமைந்துள்ள காவல்துறையின் நடவடிக்கையை பலரும் கண்டித்து வருகின்றனர்.  ஒவ்வொரு மனிதனும் தன் உரிமைகளை பெறுவதற்கு முழு உரிமையுண்டு என்று சொல்லப்படும் ஒரு நாட்டில், தடியடி போன்ற வன்முறை செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.