மும்பையில் உள்ள அடுக்குமாடிக்குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிருக்கு பயந்து மாடியில் இருந்து தொங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடிக்குடியிருப்பின் 19வது மாடியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தெற்கு மும்பையின் லால்பாக் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்த தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த 10க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்து ஏற்பட்ட போது 19வது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக குதிக்க நினைத்த நபர் செய்வதறியாது மாடியில் தொங்கிய காட்சி காண்போரை பதைபதைக்க வைத்தது. சிறிது நேரம் தொங்கிக் கொண்டு இருந்த அந்த நபர் வேறு வழியின்றி 19 வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். உயிரிழந்த நபர் அருண் திவாரி எனவும், அவருக்கு 30 வயதாகவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மும்பை விபத்து தொடர்பான பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கட்டிடத்தில் ஏன் தீவிபத்து ஏற்பட்டது என்பது தொடர்பான தகவல் இதுவரை வெளியாகவில்லை. அது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கட்டிடத்தில் யாரேனும் சிக்கியுள்ளனரா என்ற விவரமும் வெளியாகவில்லை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்