Viral Video : மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.ஏல்.ஏ ஒருவர் துப்பாக்கியுடம் நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. இங்கு கோட்மா தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ சுனில் சரப்  சமீபத்தில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது மேடையில் உற்சாகமாக நடனம் ஆடிய அவர், இடுப்பில் வைத்திருந்த கைத் துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி பிடித்த படி ஆடினார்.






இதனை கண்ட பலரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பலரும் இதை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பங்கிருந்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, பலரும் காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 


இதை தொடர்ந்து, எம்.எல்.ஏ சுனில் சரப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, காவல்துறைக்கு உத்தரவிட்டார். 






 


பொது நிகழ்ச்சியில் துப்பாக்கி ஏந்தி அனைவரையும் அச்சுறுத்தல் ஏற்படுத்திய காங்கிரஸ் எம்.எல்.ஏ சுனில் சரப் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், ரயில் பயணத்தின்போது பெண் ஒருவரிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக, சுனில் சரப் மீது ஏற்கனவே கடந்த அக்டோபரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. 




மேலும் படிக்க


Covid 19: இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா தொற்று.. இன்றைய கொரோனா நிலவரம் இதுதான்..


Martina Navratilova: ரசிகர்கள் அதிர்ச்சி.. டென்னிஸ் உலகின் தலைசிறந்த வீராங்கனைக்கு தொண்டை, மார்பக புற்றுநோய்!