உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகளின் போராட்டத்தின் போது ஏற்பட்ட சம்பவம் அநீதிக்கு எதிரானது என ராகுல், மம்தா உள்ளிட்ட எதிர்க்கட்சித்தலைவர்கள் கடும் கண்டனங்களைப் பதிவிட்டுவருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் என்ற இடத்தில் துணை முதல்வர் மற்றும் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பங்கேற்கும் விழா ஒன்று நடைபெறவிருந்தது. எனவே அவ்விழாவிற்கு வருகைத் தந்த பாஜக தலைவர்களுக்கு எதிராக விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அமைச்சர் மற்றும் பாதுகாப்பு வாகனக் கார்களை வழிமறித்து விவசாயிகள் போராட்டம் நடத்திய சமயத்தில், தீடிரென மத்திய இணைய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகனின் கார் கூட்டத்திற்குள் புகுந்தது. இதனால் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் தான், ஆத்திரமடைந்த விவசாயிகள் விபத்துக்குக் காரணமாக இருந்தக் காரை எரித்துப் போராட்டம் நடத்தினர். இவர்களின் போராட்டத்தைக்கட்டுக்கொண்டுவிதமாக விதமாக போலீசார் தடியடி நடத்திக்கலைக்க முயன்றுள்ளனர். அப்போது மிகப்பெரிய வன்முறை சம்பவம் அப்பகுதியில் அரங்கேறியது. மேலும் மாநிலத்தின் நிலைமையை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவின் பேரில் டி.ஜி.பி பிரசாந்த் குமார் சம்பவ இடத்திற்கு வந்தார். இதனையடுத்து பல மணி நேரம் போராட்டத்திற்கு ஓரளவிற்குக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருந்தப்போதும் விவசாயிகளின் மீது தாக்குதல் நடத்திய பாஜக அரசிற்கு எதிராக இன்று நாடு முழுவதும் விவசாயிகள் இன்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
மேலும் இந்தப்போராட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சித்தலைவர்கள் கண்டனங்களைத்தெரிவித்துவருகின்றனர் குறிப்பாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், விவசாயிகளின் மீது மத்திய அமைச்சரும், பாஜகவினரும் வேண்டுமென்றே திட்டமிட்டமிட்டு வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். எனவே இனியும் அமைதியாக இருந்தால் நாம் அனைவரும் செத்துவிட்டதாக அர்த்தம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேப்போன்று லக்கிம்பூரில் நடைபெற்ற வன்முறை சம்பவத்திற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனத்தைத்தெரிவித்துள்ளதோடு, விவசாயிகளுக்கு திரிணாமுல் காங்கிரசின் ஆதரவு எப்போதும் இருக்கும் எனவும் கூறியுள்ளார். மேலும் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் விவாசாயிகளின் போராட்டத்திற்கு எதிராகக் கண்டனங்களைத்தெரிவித்துவருகின்றனர்.
ஆனாலும் இந்தப்போராட்டத்திற்கு எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை எனவும், வன்முறையின் போது தனது மகன் அங்கு இல்லை என்பதற்கான வீடியோ ஆதாரம் உள்ளதாக மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இதோடு இந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையால் பா.ஜ.க வைச்சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த சூழலில் தான் இன்று உத்தரப்பிரதேசத்தில் லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்திக்கசென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று அதிகாலை பன்வீர்பூர் கிராமத்திற்கு காரில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, அவரை கிராமத்திற்குள் நுழைய அனுமதிக்காமல், கிராம எல்லையிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது