பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். படையே நடுங்கும்போது மருத்துவமனையில் படுக்கையில் கிடப்பவர்கள் எப்படி அஞ்சுவார்கள் என சொல்லியா தெரியவேண்டும். அண்மையில் தெலங்கானாவின் வாரங்கலில் மருத்துவமனையில் பாம்பு நுழைந்தது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வாரங்கலில் உள்ள மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனையில் ஒரு நோயாளியின் வார்டில் பாம்பு இருந்ததால் நோயாளிகள், ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பீதியடைந்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கிடைத்த தகவல்களின்படி, நோயாளி படுக்கையில் படுத்திருந்த போது ஒரு நாகப்பாம்பு நோயாளியின் படுக்கைக்கு அடியில் இருந்து எட்டிப்பார்த்துள்ளது. இதனால் அச்சமடைந்த நோயாளிகள் மற்றும் உதவியாளர்கள் மருத்துவமனை நிர்வாகத்தை எச்சரித்துள்ளனர். இதை அடுத்து பாம்பு அங்கிருந்து மருத்துவமனையின் நடவடிக்கையின்பேரில் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. அண்ட மருத்துவமனையில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இந்த மாதத்தில் இது இரண்டாவது முறையாகும்.
வைரலான வீடியோ கீழே உங்களுக்காக...