சமூக வலைதளங்களில் சிலர் செய்யும் நல்ல செயல்கள் தொடர்பான வீடியோ வேகமாக வைரலாவது வழக்கம். அந்தவகையில் தற்போது வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது. அதில் ஒருவர் உயிருக்கு போராடிய நாய்க்கு முதலுதவி செய்து உயிர் பிழைக்க வைக்கும் செயல் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் சில நேரங்களில் ஆச்சரியத்தை நிகழ்த்துபவர்களாக உள்ளனர்” எனப் பதிவிட்டுள்ளார். அத்துடன் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் நாய் ஒன்று உயிருக்கு போராடும் காட்சி இடம்பெற்றுள்ளது. அதற்கு ஒரு நபர் முதலுதவி செய்யும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அவர் செய்த முதலுதவிக்கு பின்பு அந்த நாய் சரியாகும் வகையில் காட்சிகள் உள்ளன.
இந்த வீடியோவை தற்போது வரை சுமார் 2 லட்சம் பேருக்கு மேல் பார்த்துள்ளனர். இந்த வீடியோவை அவர்கள் பகிர்ந்தும் வருகின்றனர். இந்த நபரை பலரும் பாராட்டி கருத்து பதிவிட்டுள்ளனர்.
இவ்வாறு பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்