சமூக வலைதளங்களில் எப்போதும் குழந்தைகள் தொடர்பான வீடியோ வைரலாவது வழக்கம். அதிலும் குறிப்பாக இரண்டு குழந்தைகள் ஒரே வீடியோவில் இருந்தால் அது நிச்சயம் வைரலாகும். அந்த வகையில் தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் வழக்கத்திற்கு மாறாக இரண்டு குழந்தைகள் சேர்ந்த்து சேட்டை செய்வதற்கு பதிலாக தங்களுடைய அன்பை பறிமாறி கொள்கின்றனர். அப்படி என்ன செய்கிறார்கள் இருவரும்?


இந்த குழந்தைகளின் வீடியோவை ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அழும் குழந்தை ஒன்றை மற்றொரு குழந்தை ஆறுதல் கூறுகிறது. இந்த இரண்டு குழந்தைகளும் அருணாச்சலப் பிரதேச மாநிலம் தவாங் பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்த சிறுவர்களின் அன்பு மற்றும் பாசம் நம்மை மிகவும் வியக்க வைத்துள்ளது. 






இந்த வீடியோ தொடர்பான பதிவை செய்துள்ள அந்த நபர், “அன்பு என்பது மனிதர்களுடன் உள்ளே எப்போதும் இருப்பது. அதை யாரும் வெளியே இருந்து கற்று கொள்ள முடியாது. அது எப்போதும் மனிதர்களுக்குள்ளே இருக்கும் ஒரு உணர்வு. அன்பின் பெரிய பலமே அது பலரிடமும் வேகமாக பற்றி கொள்ளும் தன்மை தான். அந்தவகையில் இந்த இரண்டு சிறு குழந்தைகள் ஒருவருக்கொருவர் ஆறுதல் தெரிவித்து கொண்டு அன்பை பரிமாறி கொள்கின்றனர்” எனப் பதிவிட்டுள்ளார். 


 






அவரின் இந்தப் பதிவை பலரும் பார்த்து அனைவரும் வியந்து இந்த இரண்டு குழந்தைகளின் அன்பு பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது என்று கூறி வருகின்றனர். அத்துடன் பலர் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 


 






 






 






 






 






இவ்வாறு பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 


மேலும் படிக்க:அதிர்ச்சி.. ”செத்ததுபோல நடிக்கிறான்..” : Home work செய்யாத மாணவனை அடித்துக்கொன்ற ஆசிரியர் கைது..