கேரளா மாநில மாவட்ட ஆட்சியர்கள் சிலர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர். அந்தவகையில் தற்போது வைரலாகி வரும் நபர்களில் ஒருவர் பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் திவ்யா. அவர் மாணவர்களுடன் நடனம் ஆடும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. 


கேரளா மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தின் ஆட்சியாராக திவ்யா எஸ் ஐயர் பணிபுரிந்து வருகிறார். இவர் அண்மையில் எம்.ஜி கல்லூரியின் யூத் திருவிழாவிற்கு தன்னுடைய குடும்பத்துடன் சென்று இருந்தார். அப்போது அங்கு மாணவிகள் நடனம் ஒன்றை ஆடியுள்ளனர். அதைப் பார்த்த ஆட்சியர் திடீரென்று மாணவிகளுடன் இறங்கி நடனமாடியுள்ளார். அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. கேரளாவில் பிரபலமான ஜிமிக்கி கம்மல் டான்சையே மாவட்ட ஆட்சியர் ஓரம் கட்டியுள்ளார்.


 






இந்த நடனம் தொடர்பாக அவர் ஒரு ஆங்கில தளத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில், “அந்த மாணவிகள் யூத் திருவிழாவில் நடனம் ஆடுவதை பார்த்த போது எனக்கு என்னுடைய கல்லூரி நாட்கள் நினைவிற்கு வந்தது. அதனால் நானும் அவர்களுடன் இணைந்து நடனம் ஆடினேன். என்னுடைய பெற்றோர்களும் அங்கு இருந்தனர். ஆகவே அது என்னுடைய கல்லூரி யூத் திருவிழாவை போல் இருந்தது. அவர்களுடன் என்னுடைய மகனும் இருந்தான். எனவே அது கூடுதல் சிறப்பாக அமைந்தது” எனத் தெரிவித்துள்ளார். அவரின் இந்த வீடியோ தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண