பொதுவாக சமூக வலைதளங்களில் உணவு தொடர்பான வீடியோக்கள் வைரலாவது வழக்கம் அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு உணவு வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால் இம்முறை அந்த வீடியோ வைரலாக அந்த உணவு பொருள் காரணமில்லை. அந்த உணவை தயாரிக்கும் நபர் தான் இந்த வீடியோ வைரலாக முக்கிய காரணம். அப்படி அவர் என்ன செய்கிறார்?


இந்த உணவு தொடர்பாக ஒரு அசைவ உணவு பிரியரின் இன்ஸ்டாகிராம் பக்கம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஒருவர் எண்ணெயில் கோழிக் கறியை வறுக்கிறார். அத்துடன் அந்த கோழி துண்டுகளை அவர் கொதிக்கும் எண்ணெய்க்குள் தன்னுடைய கைகளை விட்டு எடுக்கிறார். அவ்வளவு சூடாக இருக்கும் பாத்திரத்திற்குள் கையைவிட்டு இவர் கோழி துண்டை எடுத்து பின்பு அதில் மசாலாவை போட்டு தருகிறார். இந்த உணவிற்கு பெயர் பெரிய வறுத்த கோழிக்கறி என்று வைக்கப்பட்டுள்ளது. 


 






இந்த வீடியோவை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். தற்போது வரை இந்த வீடியோவை சுமார் 60ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். அத்துடன் பலரும் இந்த கடை எங்கு உள்ளது? இவர் எப்படி கொதிக்கும் எண்ணெயில் கைவிடுகிறார் போன்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். மேலும் பலரும் இது உண்மையான வீடியோ தானா என்று பலரும் சந்தேகத்தையும் எழுப்பி வருகின்றனர். 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க: இது என்ன உடம்பா இல்லை ஸ்பிரிங்கா.. அர்ஜூனரு வில்லு- வைரல் வீடியோ!