பீகாரில் உள்ள சப்ராவில் நிகழ்ந்த வித்தியாசமான திருமணத்தின் வீடியோ ஒன்று வெளிவந்து வைரலாகி உள்ளது. அங்கு வீட்டை விட்டு வெளியேறிய ஜோடி ஒன்றின் திருமணம் கிராமவாசிகளின் தலையீட்டில் நடைபெற்றுள்ளது. தகவல்களின்படி, தம்பதிகள் தப்பி ஓட முயன்றபோது கிராம மக்களால் பிடிக்கப்பட்டனர். பின்னர் அவர்களை கிராம மக்கள் சிலர் தாக்கியுள்ளனர். ஆனால், இந்த விஷயம் ஊரில் பரவியதையடுத்து, பெரியோர்கள் முயற்சியால் இருவீட்டாரின் திருமணம் ஊர் கோயிலில் நடந்துள்ளது. இவ்விவகாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்துள்ளது. மணமகள் மற்றும் மணமகன் இருவரும் திருமண வயதை அடைந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இளைஞர்கள் இருவரும் பங்கஜ் பகத் மற்றும் பூஜா குமாரி என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். தீபாவளிக்கு ஒரு நாள் முன்பு, இருவரும் வீட்டை விட்டு வெளியேறியபோது, கிராமத்து இளைஞர்களிடம் பிடிபட்டுள்ளனர். வைரலான வீடியோ கீழே....
Watch Video: வீட்டை விட்டு வெளியேறி ஓடிப்போக நினைத்த காதல் ஜோடிக்கு கிடைத்த தீபாவளி பரிசு!
ஐஷ்வர்யா சுதா | 28 Oct 2022 02:09 PM (IST)
இந்த விஷயம் ஊரில் பரவியதையடுத்து, பெரியோர்கள் முயற்சியால் இருவீட்டாரின் திருமணம் ஊர் கோயிலில் நடந்துள்ளது

காதல் ஜோடி