ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான பங்களிப்பு கணிசமானதாக இருக்க வேண்டுமே, அல்லாமல் மேலோட்டமாக இருக்கக்கூடாது என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். நிதி ஆதாரங்களை வெறுமனே அர்ப்பணிப்பது மட்டும் போதாது என்று கூறிய அவர், எந்தவொரு ஆராய்ச்சியின் முக்கியத்துவமும் உறுதியான விளைவுகளின் அடிப்படையில் அளவிடப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.


"நிதி ஆதாரங்கள் உறுதியளிக்கப்படுகின்றன என்பதற்காக, நாம் பெருமைப்பட முடியாது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முதலீடு என்பது உறுதியான விளைவுகளுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.


"சுற்றுச்சூழல் அமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்"


டெல்லி, பூசா சாலையில் இன்று நடைபெற்ற 83-வது சிஎஸ்ஐஆர் நிறுவன தின கொண்டாட்டங்களில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், தற்கால சூழ்நிலையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் முக்கியத்துவம் குறித்து கவனத்தை ஈர்த்தார்.


மென்மையான ராஜதந்திரம் மற்றும் தேசிய பாதுகாப்புடன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஒருங்கிணைந்தவை என்று தன்கர் கூறினார். "ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான முதலீடு நீடிக்கும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு இந்த நாட்களில் பாதுகாப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.


எனவே முதலீடு என்பது நாட்டுக்கானது. முதலீடு என்பது வளர்ச்சிக்கானது. முதலீடு என்பது நிலைத்தன்மைக்கானது" என்று அவர் வலியுறுத்தினார். தற்போதைய சூழலை சுட்டிக்காட்டிய தன்கர், அறிவியல் சமூகத்தினருக்கான அங்கீகாரம் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது குறித்து திருப்தி தெரிவித்தார்.


"வெறும் உதட்டளவில் மட்டும் பேசுக்கூடாது"


"கடந்த சில ஆண்டுகளில் அறிவியல் சமூகத்திற்கான அங்கீகாரம் அதிகரித்துள்ளது என்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது குறித்து அரசு மிகவும் தீவிரமாக இருப்பது உட்பட பல வழிகளில் இது அதிகரித்துள்ளது" என அவர் கூறினார்.


இந்திய விஞ்ஞானிகளின் ஆற்றலின் மீது பிரதமர் கொண்டுள்ள மரியாதை மற்றும் நம்பிக்கைக்கு தன்கர் பாராட்டு தெரிவித்தார். சுற்றுச்சூழல் அமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றத்தை அங்கீகரித்த தன்கர், "நமது விஞ்ஞானிகள் தங்களது ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும், விரிவுபடுத்தவும், அவர்களின் திறமைகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், தங்களது புதுமையான திறன்களை வெளிக்கொணர்வதன் மூலம் நாட்டிற்கு பங்களிக்கவும் ஒரு சுற்றுச்சூழல் அமைப்பு தற்போது உருவாகி வருகிறது" என்று குறிப்பிட்டார்.


ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அதிக முதலீடு செய்யுமாறு கார்ப்பரேட்டுகளுக்கு அழைப்பு விடுத்த அவர், "ஆட்டோமொபைல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இந்திய நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் உள்ளன.


நமது நாட்டின் அளவு, அதன் திறன், அதன் நிலை மற்றும் அதன் வளர்ச்சிப் பாதை ஆகியவற்றைப் பார்க்கும்போது, நமது கார்ப்பரேட்டுகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஈடுபட முன்வர வேண்டும்" என்று பிரதமர் கூறினார்.


இந்திய கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான தற்போதைய அணுகுமுறை குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த தன்கர், வெறும் உதட்டளவில் மட்டும் பேசுவதை விட கணிசமான பங்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தினார்.