புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் ஜீவரத்தினம் வீதியை சேர்ந்தவர் வினோத் (எ) செல்வகுமார் (35). திருமணமாகாத இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இரு தரப்பினரும் பல முறை ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக தெரிகிறது.


Sasikala: கால்குலேட்டரில் அடங்காத சசிகலாவின் சொத்துகள்



இந்தநிலையில் நேற்று பிற்பகல் வீராம்பட்டினம் தெப்பகுளம் அருகே வினோத் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் வினோத்திடம் வாய் தகராறில் ஈடுபட்டனர்.  இதனால் ஆத்திரமடைந்து ஒரு கட்டத்தில் வாய் தகராறு ஏற்பட்டு, இரு தரப்பினரும் அடிதடியில் ஈடுபட்டு மோதி கொண்டனர். இதில் பலத்த அடி விழுந்த வினோத் சம்பவ இடத்திலேயே மயங்கிக் கீழே விழுந்தார். அதன் பிறகும் ஆத்திரம் தீராத அந்த நபர்கள் அருகில் கிடந்த பாறாங்கல்லை எடுத்து வினோத் தலையில் பலமுறை தாக்கினர். இதில் ரத்தம் பீறிட்டு அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதை பார்த்ததும் பயந்து போன அந்த நபர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.


Suba Vee Interview: சித்தப்பாகிட்ட சீமான் ஏன் கணக்கு கேக்கல? சுப வீ




 


மேலும் , இது குறித்து அரியாங்குப்பம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அங்கு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த வினோத்தை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.


வினோத்துக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும், வினோத்தை தாக்கியவர்களை போலீசார் சிசிடிவி கட்சிகளை கைப்பற்றி தேடி வருகின்றனர். முன் விரோத தகராறில் மீனவர் கல்லால் தாக்கப்பட்டு காயமடைந்த சம்பவத்தால் வீராம்பட்டினம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுதியுள்ளது. இச்சம்பவம் குறித்து அரியாங்குப்பம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைபிடிக்க உத்தரவு பிறப்பித்தார். வீராம்பட்டினம் பகுதியில் இச்சம்பவம் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.


Thirumavalavan Speech: RSS தமிழ்நாட்டில் வாலாட்ட முடியாது-திருமாவளவன் எச்சரிக்கை!


TN Assembly: கோட்டையை அதிரவிட்ட கோடநாடு! மோதிக்கொண்ட ஸ்டாலின், எடப்பாடி