டெல்லியில் இருந்து போபால் செல்லும் வந்தே பாரத் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


வந்தே பாரத் ரயிலில் தீ


திங்கள்கிழமை காலை, ராணி கமலாபதி ரயில் நிலையத்திலிருந்து நிஜாமுதீனுக்குப் புறப்பட்ட வந்தே பாரத் சி-14 பெட்டியில் குர்வாய் ரயில் நிலையம் அருகே பேட்டரியில் இருந்து தீப்பிடித்தது. பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயை அணைக்க தீயணைப்பு படையினர் விரைந்துள்ளனர்.



பயணிகள் மத்தியில் பீதி


தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் பயணிகள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. ரயில்வேயில் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, காலை 7.00 மணியளவில் குர்வை கைதோராவில் ரயிலில் இருந்து மொத்தம் 36 பயணிகள் இறக்கப்பட்டனர். ரயில் பெட்டியில் உள்ள பேட்டரியில் தீப்பிடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குர்வாய் கெத்தோரா ரயில் நிலையத்தில் நிற்கும்போது, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியின் பேட்டரி பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்: Vikraman: ‘பல பெண்களை ஏமாற்றியுள்ளார்.. நியாயம் கேட்ட என்னை மிரட்டினார்’ - பிக்பாஸ் விக்ரமன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு


பினா ரயில் நிலையத்திற்கு முன்பு


போபால்-ஹஸ்ரத் நிஜாமுதீன் வந்தே பாரத் ரயில் எண் 20171, போபாலில் இருந்து காலை 5.40 மணிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது. இந்த சம்பவம் பினா ரயில் நிலையத்திற்கு முன் நடந்துள்ளது. பேட்டரி பெட்டியில் இருந்து தீ பரவியதாக ரயிலில் பயணித்தவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ரயில்வே துறைக்கு தகவல் கிடைத்ததும், உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.






மத்திய பிரதேசத்தின் முதல் வந்தே பாரத் ரயில்


வந்தே பாரத் ரயிலில் காங்கிரஸ் தலைவர் அஜய் சிங், ஐஏஎஸ் அவினாஷ் லாவானியா உள்ளிட்ட பலர் பயணம் செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவத்தை அடுத்து, ரயில் முழுவதும் இருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டனர். மத்தியப் பிரதேசத்தின் ராணி கம்லாபதி ரயில் நிலையத்திற்கும் டெல்லியின் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்திற்கும் இடையில் இயங்கும் இந்த ரயில் மத்தியப் பிரதேசத்தின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.