உத்தரகாண்ட் மாநிலத்தில் சில்க்யாரா விபத்திற்குப் பிறகு, உள்ளே சிக்கியவர்களை மீட்பதற்காக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த வீடியோ வெளியாகியுள்ளது.
உத்தரகாசி சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி போர்க்கால அடிப்படையில் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இன்று பதின்மூன்றாவது நாளான மீட்பு பணி, இதுவரை 48 மீட்டர் வரை தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
தொழிலாளர்களை வெளியே எடுக்க, 800 மி.மீ இரும்பு குழாய் பதிக்கப்பட்டு, அதன் மூலம் ஊர்ந்து அல்லது ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து வெளியே கொண்டுவரப்படுவார்கள்.
இந்நிலையில் இந்த பாதையின் உள்ளே இருக்கும் வீடியோவும் வெளிவந்துள்ளது. இது உள்ளே இருந்து இந்த சுரங்கப்பாதை எப்படி இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
800 மி.மீ., குழாய்கள் இடிபாடுகளில் சொருகப்பட்டு, அதன் பின், தொழிலாளர்கள் மீட்கப்படுவர். இந்த குழாய் எவ்வளவு குறுகலானது என்பதை இந்த வீடியோவில் காணலாம், முழங்கையின் உதவியால் மட்டுமே இந்த குழாயிலிருந்து ஊர்ந்து அல்லது படுத்து வெளியே வர முடியும்.
இதுகுறித்து என்.டி.ஆர்.எஃப் டைரக்டர் ஜெனரல் அதுல் கர்வால் கூறுகையில், ”சுரங்கப்பாதை முடிந்ததும், என்.டி.ஆர்.எஃப் வீரர்கள் சுரங்கப்பாதைக்குள் செல்வார்கள். இதற்குப் பிறகு, அவர்கள் ஒவ்வொருவராக வேலையாட்களை வெளியே அனுப்பத் தொடங்குவார்கள். இந்த நேரத்தில் ஒரு கயிற்றின் உதவியுடன் அல்லது சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்ட்ரெச்சரில் படுக்க வைப்பார்கள். இதற்கு முன், குழாய் ஒழுங்காக சுத்தம் செய்யப்படும். இதனால் எந்த குப்பைகளும் ஸ்ட்ரெச்சரை உள்ளேயும் வெளியேயும் எடுத்துச் செல்ல தடையாக இருக்காது” எனத் தெரிவித்தார்.