பெங்களூருவில் கம்பாலா எருமை பந்தயத்தை முன்னிட்டு போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 


பெங்களூரு 'கம்பாலா' எருமை பந்தயம் பெங்களூருவில் நடக்கும் முதல் எருமை மாடு பந்தயம் ஆகும். இதில் இரண்டு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்றும், சுமார் ரூ.7.5 கோடி முதல் ரூ.8 கோடி வரை செலவாகும் எனவும் அமைப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.


நவம்பர் 25 மற்றும் 26 தேதிகளில் அரண்மனை மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியால் நகரின் சில பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பெங்களூரு போக்குவரத்து போலீசார், சில சாலைகளை தவிர்த்துவிட்டு, மாற்று வழிகளில் பயணிக்குமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையமும் பயணிகளை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தங்கள் பயணத்தைத் திட்டமிட வலியுறுத்தியுள்ளது. இதனால் விமான நிலையத்தை அடைய போதுமான நேரத்தை எடுத்துக்கொள்ள் எனவும் குறிப்பிட்டுள்ளது. 


நவம்பர் 24, 25, 26 ஆகிய தேதிகளில் தவிர்க்கப்பட வேண்டிய பெங்களூரு சாலைகள்:


அரண்மனை சாலை: மைசூர் வங்கி வட்டத்தில் இருந்து வசந்தநகர் சுரங்கப்பாதை வரை.


எம்.வி.ஜெயராம் சாலை: பிடிஏ சந்திப்பு அரண்மனை சாலையில் இருந்து சக்கரவர்த்தி லேஅவுட் வரை
வசந்தநகர் அண்டர்பாஸ் முதல் பழைய உதயா டிவி சந்திப்பு வரை. (இரு திசைகளும்)


பெல்லாரி சாலை: மேக்ரி சர்க்கிளிலிருந்து எல்ஆர்டிஇ சந்திப்பு வரை.


கன்னிங்காம் சாலை: பாலேகுந்திரி சந்திப்பிலிருந்து லீ மெரிடியன் சுரங்கப்பாதை வரை.


மில்லர்ஸ் சாலை: பழைய உதயா டிவி சந்திப்பு முதல் எல்ஆர்டிஇ சந்திப்பு வரை.


ஜெயமஹால் சாலை: பெங்களூரு அரண்மனையைச் சுற்றியுள்ள சாலைகள் உட்பட ஜெயமஹால் சாலை.



மேலும், அரண்மனை சாலை உட்பட அரண்மனை மைதானத்தைச் சுற்றியுள்ள சில சாலைகளில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் கனரக சரக்கு வாகனங்கள் நகரின் ஐந்து வெவ்வேறு இடங்களில் திருப்பி விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.