உத்தராகண்ட்டில் வரலாற்றில் இல்லாத அளவுக்கான பெருமழையைக் கடந்த இரண்டு நாட்களில் சந்தித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அங்கே 87.6 மிமீ மழை பெய்துள்ளது. இது கடந்த 65 வருடங்களில் இல்லாத அளவுக்கான மழை. ஒரு மாதத்தில் மட்டுமே அங்கே 236.2 மிமீ மழை பெய்துள்ள நிலையில் டெல்லியில் காற்று மாசும் கட்டுக்குள் வந்திருப்பதாக காற்று தர மதீப்பிட்டு அறிக்கை குறிப்பிட்டுள்ளது. காற்றில் கார்பன் மோனோ ஆக்ஸைட் அளவும் கனிசமாகக் குறைந்துள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் டெல்லியின் தட்பவெப்பமும் கணிசமாகக் குறைந்துள்ளது. திங்கள் காலை நிலவரப்படி அங்கே 23.9 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
உத்தராகண்ட்டில் தொடர்ந்து கனமழை பொழிவதால் ஒரு சில இடங்களில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றன. போக்குவரத்தும் ஆங்காங்கே பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியிலிருந்து உத்தரகாண்ட்டின் கத்கோடமை இணைக்கும் ரயில்வே பாலம் கௌலா நதி அருகே வெள்ளம்பெருக்கெடுத்து ஓடுவதன் காரணமாக மொத்தமாக வெள்ள நீரில் மூழ்கியது. ஆப்கானிஸ்தான் மற்றும் வடமேற்கு இந்தியப் பகுதிகளில் நிலவும் காற்று அழுத்தமே இந்த மழைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. மற்றொரு பக்கம் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும் பல்வேறு மாநிலங்களில் பரவலாக மழைய பெய்து வருகிறது. டெல்லி காற்றுமாசுக்குப் பெயர்போன நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக மக்கள் மாசற்ற காற்றினை சுவாசித்து வருகிறார்கள். இந்த சுத்தமான காற்றுச்சூழல் தொடர்ந்து சில நாட்கள் நீடிக்கும் என காற்றின் மாசு அளவைக் கண்காணிக்கும் சஃபர் (SAFAR) அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கணித்துள்ளார்கள்.
அன்மையில், காற்று மாசு காரணமாக இந்திய நகரங்கள் மிக மோசமான நிலையில் உள்ளன என்றும் IQ AIR என்கிற அமைப்பு நடத்திய ‘World Air Quality Report 2020’ ன்படி உலகில் காற்று மாசுபாட்டில் மோசமான இடத்தில் உள்ள 30 நகரங்களில் 22 நகரங்கள் இந்தியாவில் உள்ளது என்றும் அந்த அமைப்பு அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தது.