உத்திர பிரதேச மாநிலம் உன்னாவ பகுதியில் வசித்து வருபவர் ரிங்கு. அவரும் அதே பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணும் பழகி வந்துள்ளனர். நெருங்கி பழகிய நிலையை இருவரும் காதல் வசப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்த பெண்ணின் குடும்பத்தினர் அவருக்கு வேறு ஒரு ஆணுடன் நிச்சயம் செய்ய முடிவு செய்தனர். இதனை ஒப்புக்கொண்ட இளம் பெண், இருவருக்கும் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.


இதனை அறிந்த ரிங்கு, தான் காதலித்து வந்த  பெண்ணுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்டதால் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானார். இதனால் அந்த பெண்ணை அழைத்து பேச முடிவு செய்தார். இதற்கு ஒப்புக்கொண்ட அந்த பெண் ரிங்கு உடன் தனியாக ஒரு இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ரிங்கு தன்னிடம் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தை எடுத்து இளம் பெண்ணின் கையை வெட்டியுள்ளார். இதில் அந்த பெண்ணின் இடது கை துண்டானது. உடனே ரிங்கு அந்த இடத்தில் தப்பி ஓடியுள்ளார்.


கை துண்டானதும் வலி தாங்க முடியாமல் அந்த பெண் கதரியுள்ளார். இளம் பெண்ணின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவர் மீட்கப்பட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இந்த சம்பவத்தை தொடர்ந்து இளம்பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் தப்பி ஓடிய ரிங்குவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலித்த பெண்ணின் கையை வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.