பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்ததாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது வழக்கு பதிவு

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

பிரதமர் நரேந்திர மோடியை மிரட்டியதாக தமிழ்நாடு  ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இவர் சென்னையை அடுத்துள்ள பம்மலில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், “ நாங்கள் எவ்வளவோ பிரதமரை நாங்கள் சந்தித்துள்ளோம். ஆனால், இவ்வளவு மட்டமாக பேசக் கூடிய பிரதமரை நாங்கள் இதுவரை பார்த்ததே இல்லை. திமுகவை அழித்துவிடுவேன் எனக் கூறுயுள்ளார்.  திமுகவை அழிக்க முடியுமா? திமுக சாதாரணமான இயக்கம் இல்லை, பல பேர் உயிர் தியாகம் செய்து வளர்க்கப்பட்ட இயக்கம்தான் திமுக. ரத்தத்தை சிந்தி வளர்த்த இயக்கம். வரலாற்றில் இந்த திமுகவை யார் யாரோ ஒழிக்கிறேன் என கூறியதுண்டு. ஆனால் இறுதியில் திமுகவை அழித்துவிடுவேன் எனக் கூறியவர்கள்தான் ஒழிஞ்சி போய் இருக்காங்களா தவிர, திமுக எப்போதும் கம்பீரமாக நிற்கும். நான் அமைச்சர் என்பதால் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன். இல்லைனா பீஸ் பீஸ் ஆக்கிடுவேன்” என பேசினார். 

Continues below advertisement

இந்த வார்த்தைகளை மைய்யமாக வைத்து டெல்லி காவல்துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. 

 




 

 

 

 

Continues below advertisement