கடந்த 2017 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்பட்ட அபராதம் நிலுவையில் இருப்பின் அவை ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பலரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.


ஜனவரி 1 2017 முதல் டிசம்பர் 31 2021 வரையில் எந்தவித வாகனமாக இருந்தாலும் அது போக்குவரத்து விதிமீறல் அபராதத்துக்கு உட்படுத்தப்பட்டிருந்தால் அவை ரத்தாகிறது. பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளும் இதில் அடங்கும்.


போக்குவரத்து ஆணையர் சந்திர பூஷன் சிங் அனைத்து போக்குவரத்து இணையதளங்களிலும் குறிப்பிட்ட காலத்திலான புகார்களை நீக்குமாறு தெரிவித்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


உத்தரப்பிரதேச அரசின் முடிவை தனியார் மற்றும் சரக்கு வாகன உரிமையாளர்கள் வரவேற்றுள்ளனர். இது தொடர்பான அறிவிப்பு குறித்து போக்குவரத்து ஆணையர் கூறுகையில், 2023 ஜூனில் உபி அரசு பிறப்பித்துள்ள 2வது அரசாணையின் படி நொய்டா விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிவந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இது தொடர்பான அறிவுரைகள் அனைத்து கோட்ட போக்குவரத்து அலுவலகங்களுக்கும் அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சலான்களின் பட்டியலைப் பெற்ற பிறகு, அதை இ-சலான் போர்ட்டலில் இருந்து நீக்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. உத்தரவின்படி, ஜனவரி 1, 2017 முதல் டிசம்பர் 31, 2021 வரையிலான காலகட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்ட சலான்கள் ரத்து செய்யப்படுகின்றன.