உத்தர பிரதேசத்தில் திருமணம் நடைபெறுவதற்கு முன்பு மணமகன் படிக்காதவர் என்று தெரிந்து திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


படிக்காத மாப்பிள்ளை:


உத்தர பிரதேசத்தில் துர்குபூர் கிராமத்தில் வசிக்கும் பாபினா சாரா என்ற பெண்ணுக்கும், பிச்மா கிராமத்தை சேர்ந்த அமான் என்ற பெண்ணுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு நிச்சயிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த வியாழன்கிழமை மாலை இவர்களுக்கான திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு ஊர்வலம் வந்தது. தொடர்ந்து, நேற்று முன் தினம் இரவு உணவு முடிந்து இரு வீட்டாரும் அடுத்த ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். 


அப்போது, மணமகன் படித்தவரா அல்லது படிக்காதவரா என்று பெண்ணின் சகோதரர் சந்தேகப்பட்டார். இந்த நிலையில், மணப்பெண்ணின் அண்ணன் 2100 ரூபாயை புரோகிதரிடம் கொடுத்து மாப்பிள்ளையை எண்ணி பார்க்கும்படி கொடுத்துள்ளார். 


அவற்றை புரோகிதரும் மணமகனிடம் எண்ண சொல்லி கொடுத்துள்ளார். இந்த பணத்தினை வாங்கிய மணமகன் சிறிது நேரத்தில் பணத்தை எண்ண முடியாமல் திணறியுள்ளார். இதை புரோகிதரும் மணப்பெண் மற்றும் மணப்பெண்ணின் அண்ணனுடன் தெரிவித்துள்ளார். 


படிப்பறிவில்லாதவர்களை திருமணம் செய்ய மாட்டேன்:


இதைகேட்டு அதிர்ச்சியடைந்த மணப்பென், படிப்பறிவு இல்லாத ஒருவரை எவ்வாறு திருமணம் செய்துகொண்டு வாழ்வது என்று கூறி, அந்த நபரை திருமணம் செய்ய மறுத்துள்ளார். மணப்பெண்ணின் இந்த முடிவால் மணமகன் வீட்டார் அதிர, அருகிலுள்ள மைன்புரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 


மணிக்கணக்கில் நடந்த பஞ்சாயத்து:


இறுதியில் திருமணம் ரத்து அறிவிக்கப்பட்டு, படிக்காத நபருக்கு தனது மகளை திருமணம் செய்து கொடுக்க முடியாது என பெண்ணின் வீட்டார் என மறுப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, மணமகன் படித்தவர் என்று பொய் கூறி பின்னணியை மறைத்துவிட்டதாக கூறி மணமகள் குடும்பத்தினர் குற்றச்சாட்டினர். காவல் நிலையத்தில் பல மணி நேரம் பஞ்சாயத்து தொடர்ந்தது. இரு தரப்பினரும் செலவு குறித்து பேசிக் கொண்டனர். செய்யப்படும் செலவு யாரையும் சாராது என்று முடிவு செய்யப்பட்டது.