Instagram Love: ஆந்திராவை சேர்ந்த இளைஞருடன் அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


இன்ஸ்டாகிராம் காதல்:


அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் தனது வாழ்க்கைக்கான காதலை தந்த,  ஆந்திராவின் தொலைதூர கிராமத்தைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்து கொள்ள ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்து இந்தியா வந்தடைந்துள்ளார். புகைப்படக் கலைஞரான ஜாக்லின் ஃபோரோ, சந்தனின் இன்ஸ்டாகிராம் புரொஃபைலை கண்டதும், அவரது எளிமை மற்றும் அரவணைப்பால் ஈர்க்கப்பட்டு அவரைக் காதலித்ததாக தெரிவித்துள்ளார். 


திருமணம் செய்ய முடிவு:


சந்தன் மற்றுன் ஜாக்லின் இடையேயான காதல் இன்ஸ்டாகிராம் வழியான ஒரு எளிய 'ஹாய்' மூலம் தொடங்கியது. அது இதயப்பூர்வமான உரையாடல்களாக மலர்ந்தது. அடுத்த 14 மாதங்களில், அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிய பழக்கம் நாளடைவில் காதலாக உருவெடுத்துள்ளது. இந்த ஜோடி இப்போது திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான  இன்ஸ்டாகிராம் பதிவில், "14 மாதங்கள் ஒன்றாக இருந்தோம், ஒரு பெரிய புதிய அத்தியாயத்திற்குத் தயாராகிறோம்" என்று ஜாக்லின் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கடந்த 6 மாதங்களாக ஜாக்லின் தனது தாயாருடன் சேர்ந்து, சந்தனின் வீட்டில் வசித்து வருகிறார். இந்திய கலாச்சாரம் பற்றி பல்வேறு விஷயங்களை ஆர்வமுடன் கற்றறிந்து வருவதையும் வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.


 






'HI" மூலம் தொடங்கிய காதல்


ஜாக்லின் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், சந்தனுடன் தன்னுடைய மகிழ்ச்சியான தருணங்கள் அடங்கிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். மேலும், தங்களுடைய காதல் பயணம் எப்படி தொடங்கி வலுவடைந்தது என்பதையும் அந்த வீடியோவில் வெளியிட்டுள்ளார். அதன்படி, ”. அவரது புரொஃபைல் வாயிலாக, சந்தன் இறையியல் அறிந்த ஒரு தீவிர கிறிஸ்தவ மனிதர் என்பதைக் கண்டேன். தொடர்ந்து நானே முதலில் அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் குறுஞ்செய்தி அனுப்பினேன். இது என்னுடைய இசை, கலை மற்றும் புகைப்படங்கள் மீதான ஈர்ப்புடன் ஒத்துப்போனது. 8 மாதங்கள் ஆன்லைனிலேயே டேட்டிங் செய்த நிலையில், எனது தாயாரிடமும் ஒப்புதல் பெற்றுக்கொண்டு, அவருடன் சேர்ந்து வாழ்க்கையின் சிறந்த பயணத்திற்காக இந்தியாவிற்கு வந்தேன்.


வயசெல்லாம் ஒரு பிரச்னையா?


எங்களது காதல் பற்றி பலரும் பல்வேறு விதமாக பேசினார்கள். சிலர் ஆதரித்தனர், சிலர் முரட்டுத்தனமாக எதிர்த்தார்கள், சிலர் நேர்மறைமறையாக அணுகினர், சிலர் எதையும் பேசாமல் அமைதியாகவும் இருந்துவிட்டனர். இதனிடையே வயது வித்தியாசத்தை மறந்துவிடக் கூடாது. எங்களுக்கு எதிரான சாத்தியங்கள் ஏராளமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஆனால் கடவுள் அற்புதமாக கதவுகளைத் திறந்து எங்களுக்கு ஒவ்வொரு அடியிலும் உதவி செய்து வருகிறார். ஏனென்றால் அவர் [இயேசு] எங்களை ஒன்றிணைத்தார், அவர் எங்களை முன்னேற்றிச் செல்வார்" என ஜாக்லின் தனது பதிவில் தெரிவித்துள்ளார். சந்தனை விட ஜாக்லின் 9 வயது பெரியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் பதிவு இணையத்தில் வைரலாக, அந்த ஜோடிக்கு ஏராளமான வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.


யூடியூபிலும் அசத்தல்:


ஜாக்லின் மற்றும் சந்தன் ஜோடி சேர்ந்து யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றனர். இந்த ஜோடி இப்போது அமெரிக்காவில் தங்கள் வாழ்க்கையை ஒன்றாகத் தொடங்க சந்தனுக்கான விசாவிற்கு விண்ணப்பித்து காத்திருக்கிறது. ஜாக்லின் ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயானவர் என்பது குறிப்பிடத்தக்கது.